டிச் உலகளாவிய குக்கிக் கொள்கையை

2016 மார்ச்சு 26

அறிமுகம்

பெரும்பாலான வலைதளங்களைப் போல் டைசன் வலைதளங்களும் குக்கீஸை பயன்படுத்துகின்றன. “குக்கீஸ்” என்பவை வலைதளங்கள் வெப் ப்ரவுஸரின் மூலம் உங்களின் கருவியில் சேமிக்கும் டெக்ஸ்ட் ஃபைல்களாகும். இவை கிட்டத்தட்ட 1990களின் இடைபட்ட காலத்திலிருந்தே இருந்துவருகின்றன. இவை இணையதளத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களுள் ஒன்றாகும். பல அத்தியாவசிய வலைதள செயல்பாடுகள் குக்கீஸை சார்ந்துள்ளன. உதாரணத்திற்கு, இவை உங்களின் ஷாப்பிங் பாஸ்கட்டில் நீங்கள் என்ன சேர்க்கிறீர்கள் என்பதை நினைவு வைத்துக் கொள்ள பயன்படுகின்றன என்பதால் இவை இல்லாமல் உங்களால் ஆன்லைனில் ஷாப் செய்ய முடியாது.


டைசனில் நாங்கள் பயன்படுத்தும் சில குக்கீஸ் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும். சேகரிக்கப்படும் அனைத்து தனிப்பட்ட தகவல்களும் எங்களின் தகவல் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்படும். குக்கீஸ் எங்களின் வலைதளங்கள் வேலை செய்ய அனுமதிக்கிறது, எங்கள் வலைதளங்களின் பார்வையாளர்களுக்கு எந்த தகவல்கள் அதிக பயனளிக்கும் என்பதைப் புரிந்துக் கொள்ளவும் எங்களுக்கு உதவுகிறது.

இந்த குக்கீஸ் திட்டம் டைசன் எப்படி உலகம் முழுவதிலும் உள்ள அதன் வலைதளங்கள் அனைத்திலும் குக்கீஸை பயன்படுத்துகிறது என்பதை விவரிக்கிறது.  இந்த தகவல் பாதுகாப்புத் திட்டத்தில், நாங்கள் “டைசன்”, “நாங்கள்” அல்லது “எங்கள்” அல்லது “எங்களது” என்று கூறுவதன் மூலம் குறிப்பிட்ட வலைதளத்தை அளிக்கும் டைசன் குழும நிறுவனம் அல்லது நிறுவனங்களைக் கூறுகிறோம். உங்கள் நாட்டில் வலைதளங்களை அளிப்பதற்கு எந்த டைசன் குழும நிறுவனம் அல்லது நிறுவனங்கள் பொறுப்பு என்பது பற்றிய தகவல்கள் மற்றும் அந்த வலைதளங்களில் பயன்படுத்தப்படும் குக்கீஸால் சேகரிக்கப்படும் எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பற்றிய தகவல்கள் எங்களின் ப்ரைவஸி போர்ட்டலில் உங்கள் நாட்டினைக் குறிக்கும் டேபை க்ளிக் செய்வதன் மூலம் பெறலாம் (http://www.dyson.co.uk/change-country.aspx). 

 

உங்களின் ஒப்புதல்

எங்களின் வலைதளங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்த குக்கீஸ் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி உங்கள் கருவியில் குக்கீஸ் அமைக்கப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்கள்.

மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
முழுமையான டிச் குக்கிக் கொள்கையை வாசிக்க விரி
சுருக்கு குக்கிக் கொள்கையை
 • நாங்கள் குக்கீஸை எப்படி பயன்படுத்துவோம்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  எங்கள் வலைதளங்களில் உள்ள பல குக்கீஸ் அத்தியாவசிய செயல்பாடுகளை மேற்கொள்ளும்; உதாரணத்திற்கு, நீங்கள் உங்களின் டைசன் கணக்கில் புகுபதிகை செய்தால், அவை உங்கள் கணக்கில் உள்ள தகவல்களை நினைவு வைத்துக் கொள்ளும். 


  மற்ற குக்கீஸ் அவசியமில்லை. ஆனால் அவை பார்வையாளர்களால் எப்படி எங்கள் வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாங்கள் புரிந்துக் கொள்ள உதவுகின்றன. இதனால் நாங்கள் ஆன்லைனில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும். நாங்கள் இதற்காக வலைதள பகுப்பாய்வு கருவிகளைப் பயன்படுத்துகிறோம். எங்களின் வலைதளங்கள் லோடாவதற்கு எவ்வளவு நேரமாகிறது, அவை எப்படி பயன்படுத்தப்படுகின்றன, எங்கள் வலைதளங்களுக்கு வரும் பார்வையாளர்கள் எந்த தகவலை அதிகம் பார்க்கின்றனர் போன்ற விஷயங்களைப் பார்க்கும். இவை எங்களின் வலைதளத்தின் ஏதேனும் ஒரு பகுதி நன்றாக வேலை செய்யவில்லையா என்பதை தெரிந்துக் கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம் நாங்கள் இவற்றை சரிசெய்து, எங்கள் வலைதளத்தை உங்களுக்கும் மற்ற பயனர்களுக்கும் பயன்படுத்துவதற்கு சிறந்ததாக மாற்ற முடியும்.


  மூன்றாம் தரப்பு குக்கீஸ் எங்களின் ஆன்லைன் விளம்பரம் எப்படி செயல்படுகிறது, எங்களின் ஆன்லைன் விளம்பரங்களை நாங்கள் எங்கு வைக்க வேண்டும் என்பதை நாங்கள் தெரிந்துக் கொள்ள உதவுகிறது. கூகுள் அல்லது யாஹூ போன்ற மற்ற வலைதளங்களில் உள்ள எங்கள் விளம்பரங்களுள் ஒன்று டைசன் வலைதளத்திற்கு ஒரு பார்வையாளரை அனுப்பியுள்ளதா என்பதை இந்த குக்கீஸ் எங்களுக்குத் தெரிவிக்கிறது.


  டைசன் ப்ராடக்ட்களில் அதிக ஆர்வமுள்ளவர்களை அடைய உதவ நாங்கள் குக்கீஸையும் பயன்படுத்தக்கூடும். எனவே நீங்கள் டைசன் வலைதளத்தைப் பார்த்தால், மற்ற தளங்களிலும் எங்களின் விளம்பரங்களைப் பார்க்கலாம். இது ரீமார்க்கெட்டிங் அல்லது நடவடிக்கைசார் விளம்பரம் எனப்படும்.


  டைசனின் வாடிக்கையாளராக உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கக்கூடிய எந்தவொரு பதிவுகளுடனும் குக்கீஸிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை இணைக்க மாட்டோம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • டைசனால் பயன்படுத்தப்படும் குக்கீஸின் வகைகள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  குக்கீஸ் இரண்டு பொதுவான வகைகளின் கீழ் வரும்: முதல் தரப்பு குக்கீஸ் (நாங்கள் அமைப்பது) மற்றும் மூன்றாம் தரப்பு குக்கீஸ் (மூன்றாம் தரப்பினர்களால் அமைக்கப்படுவது)  

  முதல் தரப்பு குக்கீஸ்
  இந்த குக்கீஸ் டைசனில் எங்களால் அமைக்கப்படுகிறது. பெரும்பாலும், இவை எங்கள் வலைதளத்தில் அத்தியாவசிய செயல்பாட்டை மேற்கொள்ள செய்கின்றன. எங்களின் வலைதளங்கள் பார்வையாளர்களால் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாங்கள் புரிந்துக் கொள்ள பயன்படுத்தும் எங்கள் வெப் அனாலிட்டிக்ஸ் குக்கீஸும் இதில் அடங்கும். இதனால் எங்கள் வலைதளத்தை மேம்படுத்த முடியும்.
  மூன்றாம் தரப்பு குக்கீஸ்

  மூன்றாம் தரப்பு குக்கீஸை டைசன் அமைப்பதில்லை. ஆனால் நாங்கள் வேலை செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர்களால் அமைக்கப்படும். இந்த மூன்றாம் தரப்பு குக்கீஸில் சில பயனுள்ள சேவைகளை அளிக்கும். உதாரணத்திற்கு ஆன்லைன் கேள்வித்தாள்கள் அல்லது நேரடி சாட் (Live Chat) (இவை டைசன் நிபுணரிடம் கேள்விகளைக் கேட்க உங்களை அனுமதிக்கும்). மற்றவை உங்களின் ப்ரவுஸிங் செயல்பாடுகளைப் பின்தொடர நாங்கள் வேலை செய்யும் விளம்பர நெட்வொர்க்குகளால் அமைக்கப்படலாம். இதனால் அவர்கள் மிகவும் உகந்த இடங்களில் எங்களின் ஆன்லைன் விளம்பரங்களை வைக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள “குக்கீஸை நிர்வகித்தல்” பகுதியில், நீங்கள் எப்படி உங்கள் செட்டிங்குகளை மாற்றலாம் என்று விவரிக்கிறோம். இதனால் மூன்றாம் தரப்பினர்கள் (விளம்பரதாரர்களும் இதில் அடங்குவார்கள்) நீங்கள் பின்தொடரப்பட விரும்பவில்லை என்பதை தெரிந்துக் கொள்வார்கள். 

  சமூக ஊடக குக்கீஸ்

  எங்கள் வலைதளங்களில் உள்ள சில பக்கங்கள் லிங்கடின், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக வலைதளங்கள் மூலம் எங்கள் பொருளடக்கத்தைப் பகிர்ந்துக் கொள்ளச் செய்கின்றன. சில சமயம், நாங்கள் யூட்யூப் போன்ற வலைதளங்களிலிருந்து வீடியோக்களை பதியக்கூடும். இந்த வலைதளங்கள் அவற்றின் சொந்த குக்கீஸை அமைக்கும், அதனை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம். இந்த சமூக ஊடக வலைதளங்கள் அவற்றிற்கென சொந்தமாக குக்கீஸ் திட்டங்களை வைத்திருக்கும். அவை இருந்தால், வழங்கமாக அவர்களின் வலைதளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் அந்த குக்கீஸ் திட்டம் உங்களுக்கு திருதியளிக்கிறதா என்பதை உறுதி செய்ய அந்த குக்கீஸ் திட்டங்களை கவனமாகத் திறனாய்வு செய்ய வேண்டும்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • குக்கீஸை நிர்வகித்தல்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  மிகப் பிரபலமான வெப் ப்ரவுஸர்கள் அனைத்தும் குக்கீஸை நிர்வகிக்க உங்களை அனுமதிக்கும். நீங்கள் அனைத்து குக்கீஸையும் அல்லது குறிப்பிட்ட வகை குக்கீஸை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

  நீங்கள் அனைத்து குக்கீஸையும் நிராகரித்தால் என்னவாகும்? 

  உங்களால் அப்போதும் எங்கள் வலைதளங்களின் சில பகுதிகளைப் பயன்படுத்த முடியும். ஆனால் குக்கீஸை செயலிழக்க செய்தாலும் உங்களால் எங்கள் வலைதளங்களின் சில பகுதிகளைப் பயன்படுத்த முடியும். ஆனால் சில பயனுள்ள பகுதிகள் வேலை செய்யாது. உதாரணத்திற்கு, உங்கள் டைசன் கணக்கில் புகுபதிகை செய்து, பயன்படுத்த முடியாது, பொருட்களை வாங்க முடியாது அல்லது ஆன்லைனில் உங்கள் டைசன் உத்திரவாதத்தைப் பதிவு செய்ய முடியாது. 

  பல்வேறு வெப் ப்ரவுஸர்களில் குக்கீஸை எப்படி நிர்வகிப்பது

  பெரும்பாலானல் ப்ரவுஸர்கள் உங்களை குக்கீஸை ஆஃப் செய்ய அனுமதிக்கும். குக்கீஸை ஆஃப் செய்வது எங்கள் வலைதளத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தைக் கட்டுப்படுத்தும்.

  பின்வரும் லிங்குகள் சில பிரபல ப்ரவுஸர்களில் குக்கீஸ் செட்டிங்குகளை எப்படி மாற்றுவது என்பது பற்றிய தகவல்களை அளிக்கும்:

  • ஆப்பிள் சஃபாரி – https://support.apple.com/en-gb/HT201265
  • கூகுள் க்ரோம் – https://support.google.com/chrome/bin/-answer.py?hl=en&answer=95647&p=cpn_cookies
  • மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் – http://windows.microsoft.com/en-US/windows7/How-to-manage-cookies-in-Internet-Explorer-9
  • மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் – http://support.mozilla.org/en-US/kb/Cookies
  குக்கீஸை நிர்வகித்தல் பற்றிய மேலும் தகவல்கள்

  www.allaboutcookies.org என்பது ஒரு பயனுள்ள வள ஆதாரம். இதில் குக்கீஸ் பற்றியும், அவற்றை எப்படி நிர்வகிப்பது என்பது பற்றியும் நிறைய விரிவான தகவல்கள் உள்ளன.

  நாங்கள் இப்போது டூ நாட் ட்ராக் (DNT) சிக்னல்களுக்கு பதிலளிப்பதில்லை என்பதை கவனியுங்கள். 

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • இந்த குக்கீஸ் திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  நாங்கள் ஆண்டிற்கு ஒருமுறை இந்த திட்டத்தைத் திறனாய்வு செய்து, அப்டேட் செய்வோம். இறுதியாக இது அப்டேட் செய்யப்பட்ட தேதியை நாங்கள் கீழே குறிப்போம்.


  நாங்கள் எங்களின் குக்கீஸ் திட்டத்தை மாற்றினால், மாற்றங்கள் பற்றிய விவரங்களை கீழே அளிப்போம். தேவைப்பட்டால், இந்த மாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா என்பதை உறுதி செய்யுமாறும் கேட்போம்.


  இந்த திட்டம் மார்ச் 2016ல் திறனாய்வு செய்யப்பட்டது மற்றும் அப்டேட் செய்யப்பட்டது.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • இந்த குக்கீஸ் திட்டத்தில் செய்யப்பட்ட முந்தைய மாற்றங்கள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  மார்ச் 2016 – புதிய குக்கீ திட்டங்களுடன் நிறுவப்பட்ட உலகளாவிய தகவல் பாதுகாப்பு போர்ட்டல்.

   

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • இந்த குக்கீஸ் திட்டத்தின் மொழிபெயர்ப்புகள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  இந்த குக்கீஸ் திட்டம் ஆங்கிலத்திலிருந்து பல்வேறு நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் எங்கள் வலைதளங்கள், அப்கள் (apps) மற்றும் கனெக்டட் ப்ராடக்ட்களைப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கு தெளிவானதாகவும், எளிதில் பயன்படுத்தத்தக்கதாகவும் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் இதனை செய்துள்ளோம். 

  இந்த குக்கீஸ் திட்டத்தின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளுக்கிடையே ஏதேனும் பிரச்னைகள் அல்லது முரண்பாடுகள் இருந்தால், ஆங்கில பதிப்பு செல்லுபடியாகும்.

   

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • எங்களைத் தொடர்புக் கொள்ளுங்கள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், கருத்துக்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் privacy@dyson.comல் எங்களின் தகவல் பாதுகாப்புக் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பலாம். நாங்கள் முடிந்தவரை உங்களுக்கு விரைவாக பதிலளிப்போம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்