டைசன் உலகளாவிய தகவல் பாதுகாப்புத் திட்டம்

ஜூன் 2017

அறிமுகம்

டைசனில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுவதையும் எப்போதும் தவறாகப் பயன்படுத்தப் படுவதில்லை என்பதையும் உறுதி செய்யும் கடமை எங்களுக்கு உள்ளது.

எங்களின் தகவல் பாதுகாப்பு கொள்கை நாங்கள் என்ன தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கிறோம், நாங்கள் ஏன் இதனை சேகரிக்கிறோம், இதனை எப்படி பயன்படுத்துவோம், உங்களின் தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்துவதில் உங்களுக்குள்ள உரிமைகள் மற்றும் உங்களின் தனிப்பட்ட உரிமையைப் பாதுகாக்க நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆகியவற்றை எங்களின் தகவல் பாதுகாப்புத் திட்டம் விவரிக்கிறது. இது எங்கள் டைசன் வலைதளங்கள் மூலமும், டைசன் அப்கள் (apps) மற்றும் எங்களின் கனெக்டட் ப்ராடக்ட்கள் (கீழே மிகவும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.) மூலமும் சேகரிக்கப்படும் தனிப்பட்ட தகவல்களுக்கு இது பொருந்தும்.


உங்களின் தனிப்பட்ட தகவல்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்வதாலும், எங்களின் வலைதளங்கள், அப்கள் (apps) மற்றும் கனெக்டட் ப்ராடக்ட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதாலும், நீங்கள் இந்த தகவல் பாதுகாப்புத் திட்டத்தின் நிபந்தனைகளைப் படித்து, புரிந்துக் கொண்டுள்ளீர்கள் என்பதை உறுதி செய்கிறீர்கள். நாங்கள் உங்களைப் பற்றி சேகரிக்கும் தனிப்பட்ட தகவல்களுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம், நாங்கள் இதனை கையாளும் விதம் பற்றி ஒளிவுமறைவின்றி இருப்பதையும், மற்றும் அதனை கட்டுப்படுத்தும் உரிமையை உங்களுக்கு அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.


இந்த தகவல் பாதுகாப்புத் திட்டத்தில், நாங்கள் “டைசன்”, “நாங்கள்” அல்லது “எங்கள்” அல்லது “எங்களது” என்று கூறுவதன் மூலம் டைசன் குழும நிறுவனம் அல்லது டைசன் வலைதளங்கள், அப்கள் (apps) அல்லது கனெக்டட் ப்ராடக்ட்களை அளிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றை குறிக்கிறோம். இந்தத் திட்டத்தில், நாங்கள் டைசன் குழும நிறுவனங்கள் அனைத்தையும் “டைசன் குழுமம்” என்று குறிப்பிடுகிறோம். உங்களைப் பற்றி சேகரிக்கப்படும் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த டைசன் குழும நிறுவனம் அல்லது நிறுவனங்கள் பொறுப்பு என்பது பற்றிய தகவல்களை எங்களின் ப்ரைவஸி போர்ட்டலில் உங்கள் நாட்டினைக் குறிக்கும் டேபை க்ளிக் செய்வதன் மூலம் பெறலாம் (http://www.dyson.co.uk/change-country.aspx).


இந்தத் திட்டம் பற்றியோ அல்லது டைசன் உங்கள் தகவல்களை எப்படி கையாளும் என்பது பற்றியோ உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், கருத்துக்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் privacy@dyson.com என்கிற முகவரியில் எங்களின் தகவல் பாதுகாப்புக் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

தகவல் பாதுகாப்புக் கொள்கைகள்

தகவல் பாதுகாப்புத் திட்டங்கள் சிக்கலானதாக இருக்கலாம். நாங்கள் முடிந்தவரை எங்களின் திட்டங்களைத் தெளிவானதாகவும், அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் உருவாக்க முயற்சித்துள்ளோம். உங்களுக்கு உதவுவதற்காக, நாங்கள் டைசனில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை எப்படி கையாளுவோம் என்பதை கீழே தகவல் பாதுகாப்பு கொள்கைகளில் தொகுத்தும் அளித்துள்ளோம். இந்த கொள்கைகள் உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதிலும், உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எப்படி கையாளப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களோ அப்படியே சரியான வழியில் கையாளுவதிலும் எங்களுக்குள்ள கடமையை விளக்குகிறது.

 

டைசனில் நாங்கள்:

 1. எங்கள் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சேவை, ப்ராடக்ட்கள் மற்றும் அனுபவங்களை அளிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், மற்றும் எங்களின் தகவல் பாதுகாப்புத் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள மற்ற காரணங்களுக்காக மட்டுமே தனிப்பட்ட தகவல்களைக் கேட்போம் அல்லது சேகரிப்போம்.
 2. உங்களைப் பற்றி எங்களிடம் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள் துல்லியமானதாகவும், உங்கள் விருப்பங்களைப் பிரதிபலிப்பதாகவும் இருப்பதை உறுதி செய்ய அவற்றின் கட்டுப்பாட்டை உங்களுக்கு அளிப்போம்.
 3. உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வோம்.
 4. எங்களிடம் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தும் விதத்தில் நேர்மையாகவும் ஒளிவுமறைவின்றியும் இருப்போம்.
 5. எங்களின் தகவல் பாதுகாப்பு கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, நாங்கள் எதற்காக உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்த வேண்டுமென்று நீங்கள் நம்பி அளித்திருக்கிறீர்களோ அதற்காக மட்டுமே, இதனைப் பயன்படுத்துவோம்.
 6. உங்களின் தனிப்பட்ட தகவல்களை எப்போதும் விற்பனை செய்ய மாட்டோம். எங்களின் தகவல் பாதுகாப்புக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி அல்லது நீங்கள் எங்களிடம் கேட்டுக் கொண்டால் மட்டுமே பகிர்வோம்.
 7. உங்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிப்போம். உங்களின் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது அவற்றை நாங்கள் பயன்படுத்தும் விதத்தையோ பாதிக்கும் முக்கிய மாற்றங்கள் இருந்தால் உங்களுக்குத் தெரிவிப்போம்.
 8. எங்களிடம் உங்களைப் பற்றி இருக்கும் தனிப்பட்ட தகவல்களுக்குப் பொறுப்பேற்போம்.
மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
முழுமையான டிச் தனியுரிமை கொள்கை படிக்க விரி
சுருக்கு தனியுரிமை கொள்கை
 • நாங்கள் எந்தவிதமான தனிப்பட்ட தகவல்களை சேகரிப்போம்?
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்
  உங்களைப் பற்றிய அனைத்து தனிப்பட்ட விவரத்தையும் சேகரிப்பதில் எங்களுக்கு ஆர்வமில்லை. உங்கள் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கான முக்கிய காரணம் நீங்களும் எங்கள் வாடிக்கையாளர்களும் எங்களிடமிருந்து எதிர்பார்க்கும் சேவை, ப்ராடக்ட்கள், அனுபங்களை அளிப்பது மற்றும் மேம்படுத்துவதாகும்.


  தனிப்பட்ட தகவல்கள் உலகம் முழுவதிலும் சற்று மாறுபட்டு வரையறுக்கப்படுகின்றன. உங்களின் தனிப்பட்ட உரிமையை உறுதி செய்யவும், உங்களைப் பற்றிய தகவல்களைப் பாதுகாக்கவும் நாங்கள் உங்களையோ அல்லது வேறு ஒரு தனிநபரையோ அடையாளம் காண்பதற்கு பயன்படுத்தப்படக்கூடிய எந்தவொரு தகவலையும் இவ்வாறு வரையறுக்கிறோம். 


  நாங்கள் பல்வேறு வழிகளில் உங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கிறோம்; நீங்கள் அந்த தகவல்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம், அல்லது வேறு முறைகளைப் பயன்படுத்தி இதனை நாங்கள் சேகரிக்கலாம். இந்தப் பகுதியில், நாங்கள் உங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கான பல்வேறு வழிகள் பற்றியும், அந்த தகவல்கள் பயன்படுத்தப்படும் சில வழிகள் பற்றியும் விவரிப்போம். உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எப்படி பயன்படுத்துவோம் என்பது பற்றிய மேலும் விவரங்களுக்கு, “நாங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களை எப்படி பயன்படுத்துவோம்” என்று தலைப்பிடப்பட்ட பகுதியைப் பாருங்கள்.
  எங்களுடன் நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் தகவல்கள்
  நீங்கள் வலைதளம், அப்கள் (apps), மின்னஞ்சல், தொலைபேசி அல்லது வேறு சில முறைகளின் மூலம் எங்களைத் தொடர்புக் கொள்ளும்போது அல்லது எங்களுடன் பேசும்போது நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரிப்போம். நீங்கள் குறிப்பிட்ட சில தகவல்களை அளிக்க வேண்டாம் என்பதை முடிவு செய்யலாம் அல்லது நீங்கள் முன்பு பகிர்ந்துக் கொண்ட ஏதேனும் தகவல்களை நீக்குமாறு கேட்கலாம். நீங்கள் அப்படி செய்தால், எங்கள் ப்ராடக்ட்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவையின் முழு பயனையும் அடைய முடியாமல் போகலாம்.


  உதாரணத்திற்கு, எங்கள் வாடிக்கையாளர் சேவை குழுக்களை நீங்கள் தொடர்புக் கொண்டால், ஆர்டர் அளித்தால், உங்கள் உத்திரவாத காலத்தைப் பதிவு செய்தால், ஒரு கருத்துகணிப்பு, போட்டி விண்ணப்பம் அல்லது கேள்வித்தாளைப் பூர்த்தி செய்தால், உங்கள் விருப்பங்கள் மற்றும் கணக்குத் தகவலை அப்டேட் செய்தால், டைசன் அப் (app) மூலம் தொடர்புக் கொண்டால் அல்லது எங்களின் ஒரு ப்ராடக்டை எங்கள் வலைதளத்தில் மதிப்பிட்டால் நீங்கள் உங்களின் தகவல்களை எங்களுக்கு வழங்கக்கூடும்.


  இந்த செயல்பாடுகளின் மூலம் நீங்கள் எங்களிடம் உங்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் மற்றும் கட்டண தகவல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துக் கொள்ளக்கூடும். நீங்கள் மற்றவர்களின் விவரங்களையும் பகிர்ந்துக் கொள்ளக்கூடும்; உதாரணத்திற்கு, நீங்கள் வேறு ஒருவரை பதிவு செய்தால் அல்லது டைசன் அப்பிற்கு (app) வேறு ஒரு நபரை பதிவு செய்தால் தகவல்களைப் பகிரக்கூடும். இது போன்ற சூழ்நிலைகளில், நீங்கள் அந்த நபருக்கு அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வதிலும், இந்த தகவல் பாதுகாப்பு கொள்கைப்படி நாங்கள் அதனைப் பயன்படுத்துவதிலும் அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லையா என்பதை நீங்கள் அவர்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  டைசன் ப்ராடக்ட்களும் அப்களும் (apps) அளிக்கும் தகவல்கள்
  உங்களைப் பற்றியும், உங்கள் டைசன் ப்ராடக்ட் பற்றியும் நீங்கள் எங்களிடம் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துக் கொள்ளக்கூடும் மற்றும் உங்களின் டைசன் கனெக்டட் ப்ராடக்ட்களிலிருந்தும் டைசன் அப்களிலிருந்தும் (apps) நேரடியாக தனிப்பட்ட தகவல்களைப் பெற்று, கையாளக்கூடும். கனெக்டட் ப்ராடக்ட் என்றால் “ஸ்மார்ட்டான”, இணையதளத்தால் இயங்கும் அல்லது டைசன் அப்பால் (app) இயக்கப்படும் டைசன் ப்ராடக்டாகும். 


  எங்களின் கனெக்டட் ப்ராடக்ட்கள் அல்லது அப்களின் (app) செயல்திறனை அதிகரிக்கவும், அவற்றை பயன்படுத்துவதில் உங்கள் அனுபவத்தை சிறப்பானதாக்கவும் எங்களுக்கு உதவுவதற்காக இவற்றை நீங்கள் பயன்படுத்துவதால் கிடைக்கும் தகவல்களை நாங்கள் சேகரிக்கக்கூடும். நாங்கள் உங்களின் மொபைல் பற்றிய இன்டர்நெட் ப்ரோட்டோகால் (IP) மற்றும்/அல்லது மீடியா அக்சஸ் கன்ட்ரோல் (MAC) ஆகியவற்றை அடையாளம் காட்டும் தகவல்களை சேகரிக்கக்கூடும். 


  எங்களின் கனெக்டட் ப்ராடக்ட்கள் மற்றும் அப்களை (apps) நீங்கள் பயன்படுத்துவதால் பெறப்படும் சில தகவல்கள் உங்களின் கனெக்டட் ப்ராடக்ட் பயன்படுத்தப்படும் இடத்தைத் தீர்மானிக்க எங்களுக்கு உதவக்கூடும். உங்களின் கனெக்டட் ப்ராடக்ட் இயங்கும் இடம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளைப் புரிந்துக் கொள்ள இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது; உதாரணத்திற்கு, இது இயங்கும் சூழல் பற்றிய அறிகுறிகளை அளிப்பது. இது கனெக்டட் ப்ராடக்டின் செயல்திறனை அதிகரிக்க எங்களுக்கு உதவும்.


  எங்களின் கனெக்டட் ப்ராடக்ட்களில் சில பயன்படுத்தப்படும் இடம், அல்லது மற்ற தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கவில்லை என்றால் இயங்காமல் போகலாம்.  எனவே அப்பிற்கு (app) பதிவு செய்து, கனெக்டட் ப்ராடக்டை பயன்படுத்தினால் நீங்கள் இந்த தகவல்களைப் பயன்படுத்த சம்மதிக்கிறீர்கள்.
  உங்களின் ஆன்லைன் செயல்பாடுகளால் பெறப்படும் தகவல்கள்
  எங்கள் வலைதளங்களின் பார்வையாளர்கள் அனைவரிடமிருந்தும் அதாவது நீங்களே முன்வந்து தகவல்களை தந்தாலோ அல்லது எங்களின் வலைதளங்களைப் பார்த்தாலோ குறிப்பிட்ட தனிப்பட்ட தகவல்களையும், பெயர் வெளியிடாமல், மொத்த புள்ளிவிவரங்களையும் நாங்கள் சேகரித்து, சேமித்து வைப்போம். நாங்கள் சேகரிக்கும் தகவல்களில் நீங்கள் பயன்படுத்தும் கருவியின் இன்டர்நெட் ப்ரோட்டோகால் (IP) முகவரி, நீங்கள் பயன்படுத்தும் ப்ரவுஸர் மென்பொருள், உங்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், பயன்படுத்திய தேதி மற்றும் நேரம், எங்கள் வலைதளத்துடன் நீங்கள் இணைந்த வலைதளத்தின் இணையதள முகவரி மற்றும் எங்கள் வலைதளங்களை நீங்கள் எப்படி பயன்படுத்தினீர்கள் என்பது பற்றிய தகவல்கள் அனைத்தும் அடங்கியிருக்கும்.


  எங்களின் வலைதளங்கள் லோடாவதற்கு எவ்வளவு நேரமாகிறது, அவை எப்படி பயன்படுத்தப்படுகின்றன, எங்கள் வலைதளங்களின் பல்வேறு பிரிவுகளுக்குச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, மற்றும் பார்வையாளர்கள் எந்த தகவல்களை அதிகமாகப் பார்க்கின்றனர் என்பதைத் தெரிந்துக் கொள்ள நாங்கள் இந்த தகவல்களைப் பயன்படுத்துவோம். இது எங்களின் வலைதளத்தின் ஏதேனும் ஒரு பகுதி நன்றாக வேலை செய்யவில்லையா என்பதை தெரிந்துக் கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம் நாங்கள் இவற்றை சரிசெய்து, எங்கள் வலைதளத்தை உங்களுக்கும் மற்ற பயனர்களுக்கும் பயன்படுத்துவதற்கு சிறந்ததாக மாற்ற முடியும்.


  டைசனின் வாடிக்கையாளராக உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கக்கூடிய எந்தவொரு பதிவுகளுடனும் உங்களின் ஆன்லைன் செயல்பாடுகளின் மூலம் சேகரித்த தகவல்களை இணைக்க மாட்டோம்.
  குக்கீஸ்
  நீங்கள் எங்கள் வலைதளங்களைப் பயன்படுத்தும்போது, குக்கீஸால் சேகரிக்கப்படும் தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துவோம். “குக்கீஸ்” என்பவை வலைதளங்கள் வெப் ப்ரவுஸரின் மூலம் உங்களின் கருவியில் சேமிக்கும் டெக்ஸ்ட் ஃபைல்களாகும். இவை கிட்டத்தட்ட 1990களின் இடைபட்ட காலத்திலிருந்தே இருந்துவருகின்றன. இவை இணையதளத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களுள் ஒன்றாகும். 


  டைசனில் நாங்கள் பயன்படுத்தும் சில குக்கீஸ் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும். சேகரிக்கப்படும் அனைத்து தனிப்பட்ட தகவல்களும் இந்த தகவல் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்படும். எங்கள் வலைதளங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், இந்த குக்கீஸ் உங்களின் கருவியில் அமைக்கப்படுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.


  நாங்கள் பயன்படுத்தும் குக்கீஸின் வகைகள் மற்றும் எங்கள் வலைதளங்களில் வைக்கப்பட்டுள்ள குக்கீஸை எப்படி நிர்வகிப்பது என்பது பற்றிய மேலும் தகவல்களுக்கு ல் எங்கள் குக்கீஸ் கொள்கையைப் பாருங்கள். நாங்கள் இப்போது டூ நாட் ட்ராக் (DNT) சிக்னல்களுக்கு பதிலளிப்பதில்லை என்பதை கவனியுங்கள்.
  மின்னஞ்சல் கருத்துப்பரிமாற்றங்கள்
  நீங்கள் விரும்பினால், நீங்கள் தெரிந்துக் கொள்ள விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கும் டைசனில் நடக்கும் அனைத்து விஷயங்கள் பற்றியும் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவோம்; அது எங்களின் புதிய ப்ராடக்ட் அறிவிப்புகளாகவோ, உரிமையாளர் சலுகைகளாகவோ அல்லது வரப்போகும் நிகழ்ச்சிகளாகவோ எதுவாக இருந்தாலும், நீங்கள் எங்களிடமிருந்து பெறும் கருத்துப்பரிமாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா என்பதை உறுதி செய்ய விரும்புவோம். எங்களிடமிருந்து தகவல்களைப் பெற விரும்பினாலோ, அல்லது நாங்கள் உங்களைத் தொடர்புக் கொள்வதை நிறுத்த வேண்டுமென்று விரும்பினாலோ அதனை எப்படி அப்டேட் செய்வது அல்லது மாற்றுவது என்பதை கீழே ‘நாங்கள் உங்களைத் தொடர்புக் கொள்ளும் விதத்தை எப்படி நீங்கள் மாற்றலாம்?” என்று தலைப்பிடப்பட்டுள்ள பகுதியில் பார்க்கலாம்.


  சில சமயம் நாங்கள் அனுப்பிய மின்னஞ்சல்களைத் திறந்தீர்கள் என்றால் எங்களுக்கு அறிவிப்பு வந்துவிடும்; நாங்கள் சுவாரஸ்யமான பொருளடக்கம் மற்றும் அனுபவங்களை உங்களுக்கு அளிப்பதன் மூலம் எங்கள் மின்னஞ்சல்களை முடிந்தவரை சுவாரஸ்யமாக்க எங்கள் குழுக்களுக்கு உதவுவதற்கு இந்த புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவோம்.
  சமூக ஊடகம்
  சமூக ஊடகத்தில் உங்களுடன் இணைவது எங்களுக்குப் பிடித்திருக்கிறது. நீங்கள் உங்களின் டைசன் ப்ராடக்ட்கள் பற்றி எங்களைத் தொடர்புக் கொள்ள, அல்லது உங்கள் டைசன் ப்ராடக்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க சமூக ஊடகத்தைப் பயன்படுத்தக்கூடும். மக்கள் எங்களைப் பற்றியும், எங்கள் ப்ராடக்ட்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் பற்றியும் என்ன கூறுகிறார்கள் என்பதை சிறப்பாகப் புரிந்துக் கொள்ளவும், சமூக ஊடகம் மூலம் எங்களைத் தொடர்புக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு உதவவும் நாங்கள் பொதுவாகக் கிடைக்கும் சமூக ஊடகம் மற்றும் ஆன்லைன் வலைதளங்களைத் திறனாய்வு செய்வோம். 


  சமூக ஊடகம், ஆன்லைன் வலைதளங்கள் மூலம் நாங்கள் சேகரிக்கும் தகவல்களில் சில சமயம், ஆன்லைனில் போடப்பட்டு, பொதுவாகக் கிடைக்கும் தனிப்பட்ட தகவல்களும் அடங்கியிருக்கும். நாங்கள் பயன்படுத்தும் எந்தவொரு தகவலும் அதன் ஆதாரத்துடன் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது எங்கிருந்து பெறப்பட்டது என்று தெரியவில்லையா என்பதை உறுதி செய்வோம். 


  இந்த ஆன்லைன் மற்றும் சமூக ஊடக வலைதளங்களில் அவர்கள் எப்படி உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தவும் பகிரவும் செய்வார்கள் என்பதை விவரிக்கும் அவர்களுக்கென சொந்த தகவல் பாதுகாப்புத் திட்டங்கள் இருக்கக்கூடும். நீங்கள் அந்த வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு, பகிர்ந்துக் கொள்ளப்படும் முறை உங்களுக்கு திருப்தியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய அவற்றின் தகவல் பாதுகாப்புத் திட்டங்களை கவனமாகத் திறனாய்வு செய்ய வேண்டும்.
  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எப்படி பயன்படுத்துவோம்?
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  உங்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்குமான முக்கிய காரணம் நீங்கள் எங்களிடமிருந்து எதிர்பார்க்கும் சேவை, ப்ராடக்ட்கள் மற்றும் அனுபவங்களை அளிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும்தான்.


  எங்களிடம்


  நீங்கள் எங்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பின்வரும் வழிகளில் பயன்படுத்துவோம்:

  • உங்களின் சந்தேகங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் பதிலளிப்பதற்கு;
  • உங்களுடன் கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கு;
  • எங்கள் ப்ராடக்ட்களுக்கு சேவைகளையும் ஆதரவையும் அளிப்பதற்கு;
  • வாடிக்கையாளர் திருப்தி பற்றிய கருத்துக்கணிப்புகளுக்கு மற்றும் எங்களின் நிபுணர்களுள் ஒருவரிடமிருந்து உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் உங்களுக்கு கிடைக்கும் அனுபவத்தை மேம்படுத்த எங்களை அனுமதிப்பதற்கு;
  • டைசனின் கொள்கைகள், நிபந்தனைகள் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அது பற்றிய தகவல்களையும், நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய வேறு ஏதேனும் விஷயங்கள் பற்றியும் உங்களுக்குத் தெரிவிப்பதற்கு;
  • நீங்கள் விரும்பினால், எங்களின் மற்ற ப்ராடக்ட்கள் மற்றும் சேவைகள் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதற்கு; மற்றும்
  • உங்களின் டைசன் ப்ராடக்ட்கள் பற்றிய அத்தியாவசிய சேவை தகவல்களை உங்களுக்கு அளிப்பதற்கு; மற்றும்
  • நீங்கள் எங்களிடம் பொருட்கள் வாங்கும் விதத்தினைத் தனிப்பயனாக்க; உதாரணமாக, எங்கள் வலைதளங்கள் மற்றும் அப்கள் (apps) மூலமாகவும் மூன்றாம் தரப்பு வலைதளங்கள் மூலமாகவும் (சமூக ஊடகத் தளங்கள் உட்பட) எங்கள் ப்ராடக்ட்களையும், நீங்கள் விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கும் சலுகைகளையும் உங்களுக்குத் தெரிவிப்பதால்.


  டைசன் ப்ராடக்ட்கள் மற்றும் அப்களிலிருந்துப் (apps) பெறப்படும் தகவல்கள்


  நாங்கள் டைசன் ப்ராடக்ட்கள் மற்றும் அப்களிலிருந்து (app) சேகரிக்கும் தனிப்பட்ட தகவல்களை தனியாகவும், உங்கள் வாடிக்கையாளர் பதிவுடன் (நீங்கள் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் தகவல்கள்) சேர்த்தும் பின்வரும் வழிகளில் பயன்படுத்துவோம்:


  • எங்கள் ப்ராடக்ட்களின் செயல்திறனையும் நிலைத்தன்மையையும் கண்காணிப்பதற்கு;
  • எங்கள் ப்ராடக்ட்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கு;
  • எங்களின் கனெக்டட் ப்ராடக்ட்களை நீங்கள் பயன்படுத்தும் விதத்தை கண்காணிப்பதற்கு. அப்போதுதான் அவற்றின் செயல்திறனையும், அவற்றை பயன்படுத்துவதில் உங்களுக்கு ஏற்படும் அனுபவத்தையும் சிறப்பானதாக்க முடியும்;
  • எங்களின் கனெக்டட் ப்ராடக்ட்களுக்கு அப்டேட்களையும் சேவைகளையும் அளிப்பதற்கு (இதில் மென்பொருள் மற்றும் எங்கள் அப்களை (apps) அப்டேட் செய்வதும், தரம் உயர்த்துவதும் அடங்கும்); மற்றும்
  • ப்ரொஃபைலிங்கிற்கும் மற்றும் எங்கள் ப்ராடக்ட்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய புள்ளிவிவர பகுப்பாய்விற்கும்.


  உங்களின் ஆன்லைன் செயல்பாடுகளிலிருந்து பெறப்படும் தகவல்கள்


  உங்களின் ஆன்லைன் செயல்பாடுகளின் மூலம் பெறும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பின்வருபவற்றிற்கு பயன்படுத்துவோம் (குக்கீஸை பயன்படுத்தி சேகரிக்கப்பட்டது):

  • எதிர்காலத்தில் நீங்கள் எங்களிடம் பொருட்களை வாங்கும் முறையை விருப்பமைவு செய்வதற்கு; உதாரணத்திற்கு, உங்களுக்குப் பிடிக்குமென்று நாங்கள் நினைக்கும் ப்ராடக்ட்களையும் சலுகைகளையும் உங்களுக்குக் காட்டுவதன் மூலம்; மற்றும்
  • ப்ரொஃபைலிங்கிற்காகவும் மற்றும் ப்ராடக்ட் எந்தளவு பிரபலமடைந்துள்ளது என்பது பற்றிய புள்ளிவிவர பகுப்பாய்விற்கும், எங்களின் வலைதளங்கள் அல்லது அப்களை (apps) பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்களின் போக்கு எப்படி உள்ளது என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கும்.


  உங்களின் தனிப்பட்ட தகவல்களின் மற்ற சாத்தியமான பயன்கள்


  நாங்கள் பின்வருபவற்றுக்காகவும் உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தக்கூடும்:
  • உங்களின் டைசன் ப்ராடக்ட் அல்லது உத்திரவாதம் தொடர்பான விஷயங்கள் குறித்து ஏற்படும் பிரச்னைகள், கோரிக்கைகள் அல்லது விசாரணைகளில் உதவுவதற்கு; மற்றும்
  • எங்களின் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்கி இருப்பதற்கு.
  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • டைசன் தொடர்பு உறுதிமொழி
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  எங்களுடைய புதிய ப்ராடக்ட் அறிவிப்புகள், உரிமையாளர் சலுகைகள், புதிய டைசன் ப்ராடக்ட்களைப் பரிசோதிப்பதற்கான வாய்ப்புக்கள், அல்லது வரவிருக்கும் நிகழ்வுகள் என எதுவானாலும் உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் விரும்புகிறோம். அவ்வப்போது ஜேம்ஸ் டைசன் அறநிறுவனம் மற்றும் ஜேம்ஸ் டைசன் விருது பற்றிய தகவல்களை உங்களுக்குத் தெரிவிப்போம்.


  நாங்கள் இதனை நாங்கள் இதனை மின்னஞ்சல், தபால், எஸ்.எம்.எஸ்., சமூக ஊடகத் தளங்கள், தொலைபேசி போன்ற பல்வேறு வழிகளில் அனுப்புவோம். ஆனால் நாங்கள் உங்களுக்கு இவற்றை அனுப்புவது உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அனுப்புவோம்.


  முடிவாக, நீங்கள் எங்களிடமிருந்து பெறும் கருத்துப்பரிமாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா என்பதை உறுதி செய்துக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம்.


  எனவே நாங்கள் பின்வரும் உறுதிமொழியை அளிக்கிறோம்:

  • மார்க்கெட்டிங் கருத்துப்பரிமாற்றங்களை (ஜேம்ஸ் டைசன் அறநிறுவனம் மற்றும் ஜேம்ஸ் டைசன் விருது பற்றிய தகவல்கள் உட்பட) நாங்கள் அனுப்புவதில் உங்களுக்குப் பிரச்னை இல்லை என்று நீங்கள் எங்களிடம் கூறினால் மட்டுமே அவற்றை அனுப்புவோம்;
  • மார்க்கெட்டிங் கருத்துப்பரிமாற்றங்களை நாங்கள் அனுப்புவதில் உங்களுக்குப் பிரச்னை இல்லை என்று நீங்கள் எங்களிடம் கூறினால் மட்டுமே மற்ற டைசன் குழும நிறுவனம் உங்களுக்கு அவற்றை அனுப்புவதை அனுமதிப்போம்;
  • டைசன் குழுமத்திற்கு வெளியே உள்ள யாருக்கும் அவர்களின் சொந்த மார்க்கெட்டிங் காரணங்களுக்குப் பயன்படுத்த உங்களின் தனிப்பட்ட தகவல்களை அளிக்க மாட்டோம்; மற்றும்
  • எந்த நேரத்திலும் உதவி அல்லது மார்க்கெட்டிங் கருத்துப்பரிமாற்றங்களைப் பெறுவதை நிறுத்துவதற்கான விருப்பத்தேர்வை உங்களுக்கு அளிக்கிறோம்.
  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • டைசன் உரிமையாளர் ஆதரவு
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  அவ்வப்போது, உங்களுக்கு சொந்தமான டைசன் ப்ராடக்ட்களில் உங்களுக்கு உதவுவதற்காக நாங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தக்கூடும். நாங்கள் இதனை மின்னஞ்சல், தபால், எஸ்.எம்.எஸ்., தொலைபேசி மற்றும் இன்-அப் (in-app) அறிவிப்புகள் போன்ற பல்வேறு வழிகளில் மேற்கொள்வோம்.எங்கள் ப்ராடக்ட்கள் அல்லது சேவைகளின் பயனரான உங்களுக்கு நாங்கள் பின்வரும் உதவிகரமான.


  கருத்துப்பரிமாற்றங்களை அனுப்புவோம்:

  • நீங்கள் பயன்படுத்தும் டைசன் ப்ராடக்ட் அல்லது டைசன் சேவை பற்றிய உதவிகரமான தகவல்கள்;
  • சிறந்த செயல்திறனுக்கு  உங்கள் டைசன் ப்ராடக்டை எப்படி பராமரிப்பது என்பது பற்றிய நினைவூட்டல்கள்;
  • பரிந்துரைக்கப்பட்ட அப்பிற்கான (app) அல்லது உங்கள் ப்ராடக்டின் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய மென்பொருள் அப்டேட்கள் அல்லது தரம் உயர்த்துதல் ஆகியவற்றுக்கான அலெர்ட்கள்; Alerts for 
  • உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் டைசன் நிபுணர்களிடமிருந்து எப்படி, எங்கு உதவி பெறுவது என்பது பற்றிய தகவல்கள்;
  • உங்கள் டைசன் உத்திரவாதம் பற்றிய தகவல்கள்;
  • முக்கியமான ப்ராடக்ட் பாதுகாப்பு அல்லது நினைவூட்டும் அறிவிப்புகள் ஏதேனும் இருந்தால் அது தொடர்பான அலெர்ட்கள்; மற்றும்
  • டைசன் ப்ராடக்ட் அல்லது சேவையை நீங்கள் பயன்படுத்திய பிறகு நாங்கள் எப்படி செயல்பட்டோம் என்பது பற்றிய உங்கள் கருத்தினைப் பெறுவதற்கான கோரிக்கைகள். 


  உங்களின் விருப்பங்களை மாற்றும்வரை, அல்லது எங்களிடமிருந்து உதவியளிக்கும் கருத்துப்பரிமாற்றங்களைப் பெறுவதை நிறுத்த விரும்புகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கும்வரை நாங்கள் உங்களுக்கு உதவி கருத்துப்பரிமாற்றங்களை அனுப்புவோம். இதனை எப்படி செய்வது என்பது பற்றிய மேலும் தகவல்களுக்கு பின்வரும் பகுதியைப் பாருங்கள். 


  உங்களின் விவரங்கள் மாறினால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போதுதான் எங்களால் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியும்.
  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • எங்களின் ப்ராடக்ட்கள், சேவைகள் மற்றும் ஆதரவு பற்றி நாங்கள் உங்களைத் தொடர்புக் கொள்ளும் முறையை நீங்கள் எப்படி மாற்றலாம்?
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்
  மார்க்கெட்டிங் கருத்துப்பரிமாற்றங்களை நாங்கள் அனுப்புவதில் உங்களுக்குப் பிரச்னை இல்லை என்று நீங்கள் எங்களிடம் கூறினால் மட்டுமே அவற்றை அனுப்புவோம்;


  நாங்கள் உங்களைத் தொடர்புக் கொள்ளும் முறையை மாற்ற விரும்பினால், பின்வரும் வழிகளைப் பயன்படுத்தலாம்;


  ஆப்ட்-இன் /என்னைத் தொடர்புக் கொள்ள துவங்குங்கள்;


  நீங்கள் இதற்கு முன் உங்களுக்கு மார்க்கெட்டிங் கருத்துப்பரிமாற்றங்களை அனுப்புமாறு கேட்டிருக்கவில்லை என்றால், பின்வருமாறு நீங்கள் உங்களைத் தொடர்புக் கொள்ள துவங்க (சிலசமயம் இது “ஆப்ட்-இன்” எனப்படும்) எங்களிடம் கேட்கலாம்:
  • டைசன் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புக் கொண்டு, நீங்கள் எங்களிடமிருந்து கருத்துப்பரிமாற்றங்களைப் பெற விரும்புகிறீர்கள் என்று குறிப்பிடலாம்; அல்லது 
  • எங்கள் வலைதளத்தில் உங்கள் கணக்கில் புகுபதிகை செய்து, உங்களின் விருப்பங்களையும் தகவல்களையும் மாற்றலாம்.


  உங்களின் விருப்பங்களை மாற்றுதல்


  நாங்கள் உங்களைத் தொடர்புக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் முன்பு கூறியிருந்து (“ஆப்ட்-இன்” செய்திருந்தால்), நாங்கள் அப்படி செய்யும் விதத்தை மாற்றவோ அல்லது அப்டேட் செய்யவோ நீங்கள் விரும்பினால், பின்வரும் முறையில் நீங்கள் உங்களின் விருப்பங்களை அப்டேட் செய்யலாம்: 
  • டைசன் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புக் கொண்டு, நாங்கள் உங்களைத் தொடர்புக் கொள்ளும் விதத்தை மாற்றவோ அல்லது அப்டேட் செய்யவோ விரும்புகிறீர்கள் என்று குறிப்பிடலாம்; அல்லது
  • எங்கள் வலைதளத்தில் உங்கள் கணக்கில் புகுபதிகை செய்து, உங்களின் விருப்பங்களையும் தகவல்களையும் மாற்றலாம்.


  ஆப்ட்-அவுட்/எங்களைத் தொடர்புக் கொள்வதை நிறுத்துங்கள்;


  நீங்கள் எங்களிடமிருந்து மார்க்கெட்டிங் அல்லது உதவி கருத்துப்பரிமாற்றங்களைப் பெறுவதை நிறுத்த விரும்பினால் (சிலசமயம் “ஆப்டிங் அவுட்” எனப்படும்), நீங்கள் பின்வருபவற்றின் மூலம் எந்த நேரமும் செய்யலாம்:

  • உங்கள் நாட்டிலுள்ள டைசன் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புக் கொண்டு, நீங்கள் இது போன்ற கருத்துப்பரிமாற்றங்களை இனிமேல் பெற விரும்பவில்லை என்று குறிப்பிடலாம்;
  • எங்களின் அனைத்து மின்னஞ்சல் கடிதங்களிலும் (மார்க்கெட்டிங் மற்றும் ஆதரவு கருத்துப்பரிமாற்றங்கள் அனைத்திலும்) கொடுக்கப்பட்டிருக்கும் அன்சப்ஸ்க்ரைப் ஆப்ஷனை பயன்படுத்தலாம்; அல்லது
  • எங்கள் வலைதளத்தில் உங்கள் கணக்கில் புகுபதிகை செய்து, உங்களின் விருப்பங்களையும் தகவல்களையும் மாற்றலாம்.
  • privacy@dyson.com என்கிற முகவரியில் எங்கள் உலகளாவிய தகவல் பாதுகாப்புக் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • டைசன் மூன்றாம் தரப்பினர்களிடம் எந்த தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துக் கொள்ளும்?
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்
  மிக முக்கியமாக, நாங்கள் எப்போதும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம். இந்த தகவல் பாதுகாப்புக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி அல்லது நீங்கள் எங்களிடம் கேட்டுக் கொண்டபடி மட்டுமே இதனை பகிர்ந்துக் கொள்வோம்.
  எங்களின் சார்பில் உங்களுக்கு சேவைகளை அளிக்கும் குறிப்பிட்ட மூன்றாம் தரப்பினர்களுடன் உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிர்ந்துக் கொள்வோம். அந்த சேவைகளை மேற்கொள்ள அவர்களுக்குத் தேவைப்படும் தனிப்பட்ட தகவல்களை மட்டுமே அவர்களால் பயன்படுத்த முடியும். அவர்கள் உங்களின் தகவல்களை இரகசியமாக வைத்திருக்க வேண்டும். நாங்கள் அவர்களிடம் அவற்றை எதற்கு பயன்படுத்த வேண்டுமென்று கூறியிருக்கிறோமோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்த கூடாது. மேலும், இந்த தகவல் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஏற்ப மட்டுமே எப்போதும் பயன்படுத்த வேண்டும்.


  எங்களின் சார்பில் சேவைகளை அளிக்கும் மூன்றாம் தரப்பினர்கள் பின்வரும் வகைகளில் வருவார்கள்:


  • மற்ற டைசன் குழும நிறுவனங்கள்;
  • குறிப்பிட்ட நாடுகளில் எங்களின் ப்ராடக்ட்களை விற்பனை செய்வதற்கு உதவும் எங்கள் விநியோகஸ்தர்கள்;
  • உங்களுக்கு ப்ராடக்ட்களை வழங்க எங்களுக்கு உதவுபவர்கள்;
  • மின்னஞ்சல் சேவைகள், ப்ராடக்ட் சேவைகள் மற்றும் ரிப்பேர்கள், ப்ராடக்டை வாங்குவதற்கான நிகழ்முறைகள், நிதி சேவைகள், தணிக்கை சேவைகள், நிர்வாக சேவைகள், தகவல் தொழில்நுட்பங்கள் (உ.தா. டேட்டா ஸ்டோரேஜ்), பாதுகாப்பு சேவைகள், காப்பீடு க்ளெய்கள் ஆகியவற்றிற்கு எங்களுக்கு உதவும் மூன்றாம் தரப்பினர்கள்;
  • எங்கள் மார்க்கெட்டிங்கிற்கு உதவும் மூன்றாம் தரப்பினர்கள்; இதில் எங்களின் ஆன்லைன் விளம்பரம் எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது என்பதை நாங்கள் புரிந்துக் கொள்ள, அல்லது டைசன் ப்ராடக்ட்களில் அதிக ஆர்வமுள்ளவர்களை அடைய, எங்கள் வலைதளங்களில் குக்கீஸை அமைக்க எங்களுக்கு உதவுபவர்கள் இதில் அடங்குவார்கள்); மற்றும்

  • உங்களுக்கு சேவைகளையும் பதில்களையும் அளிக்க எங்களுக்கு உதவும் மூன்றாம் தரப்பினர்கள்.


  நீங்கள் எங்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் தனிப்பட்ட தகவலுக்கு நாங்கள் பொறுப்பேற்போம் மற்றும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிர்ந்துக் கொள்ளும் மூன்றாம் தரப்பினர்கள், இந்த தகவல் பாதுகாப்புத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதே அளவு தகவல் பாதுகாப்பை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வோம்.


  சட்டப்படி தேவைப்பட்டால் நாங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வோம். இதில் நீதிமன்ற ஆணை அல்லது நீதிமன்ற அழைப்பாணை போன்ற சட்ட நிகழ்முறைக்கு இணங்கி நடத்தல், அல்லது மற்ற தேசிய, மாநில அல்லது உள்ளூர் சட்டங்களுக்கு இணங்கி நடத்தல் போன்றவை இதில் அடங்கும்.
  நாங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களை எப்படி பகிர்ந்துக் கொள்வோம் என்பது பற்றிய மேலும் தகவல்களை நீங்கள் தெரிந்துக் கொள்ள விரும்பினால், எங்களின் தகவல் பாதுகாப்புக் குழுவிற்கு privacy@dyson.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


  உங்கள் வீட்டிலுள்ள (அலெக்ஸா (Alexa) என்று அழைக்கப்படும் அமேஸான் எக்கோ (Amazon Echo) போன்ற) ஒரு சில மூன்றாம் தரப்பு தயாரிப்புகள் உங்கள் டைசன் தயாரிப்புகளுடன் இணைந்து செயல்பட, எங்களுடைய சில இணைக்கப்பட்டத் தயாரிப்புகளுக்கு, இணைந்து செயல்படும் திறனை உருவாக்கியுள்ளோம். இது ஒரு ‘சாமர்த்திய வீட்டின்’ (smart house) சூழ்நிலையை உங்களுக்கு அனுகூலமாக்குகிறது. இருப்பினும், தேவைப்படும்போது, தகுந்த செயல்பாட்டினை இயக்கினால் மட்டுமே இவை செயல்படும்.
  உங்கள் டைசன் இணைக்கப்பட்ட தயாரிப்பினை ஒரு மூன்றாம் தரப்பு தயாரிப்புடன் இணைக்க அனுமதிப்பீர்களானால், (தனிப்பட்டத் தகவல்கள் உள்பட) ஒரு சில தகவல்களை மூன்றாம் தரப்பு தயாரிப்புகளுடனும், சம்பந்தப்பட்ட மூன்றாம் தரப்பு வழங்குபவருடனும் பகிர்ந்துகொள்வது அவசியம். பொதுவாக, இரு தயாரிப்புகளையும் இணைக்க ஒரு பிரத்யேக மேற்கோள் எண்ணும், உங்கள் தயாரிப்பு, மற்றும் அதனை எப்படி உபயோகிப்பதென்பதின் தகவல்களையும் நாங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். இரு தயாரிப்புகளும் இணைந்து செயல்பட குறைந்தபட்சம் தேவைப்படும் தனிப்பட்ட தகவல்களை மட்டுமே பகிர்வோம். மூன்றாம் தரப்பினர், உங்கள் தனிப்பட்ட தகவல்களை, (அத்துடன் அவற்றின் சொந்த தயாரிப்புகள் மூலமாக சேகரித்தத் தனிப்பட்ட தகவல்களை) எப்படி உபயோகிப்பார்கள் என்ற விவரங்கள், மூன்றாம் தரப்பினர் அந்தரங்கக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தரப்பினரின் தயாரிப்புகளை உபயோகிக்கும் முன், மற்றும் உங்கள் டைசன் இணைக்கப்பட்டத் தயாரிப்புகளுடன் இணைக்கும் முன், அவற்றின் அந்தரங்கக் கொள்கைகளை நீங்கள் கவனமாகத் திறனாய்வு செய்ய வேண்டும். இரு தயாரிப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பினைத் தடுப்பதன் மூலம் டைசன் இணைக்கப்பட்ட தயாரிப்பு, மூன்றாம் தரப்பினரின் தயாரிப்புடன் தகவல்கள் பகிர்வதை நிறுத்திவிடலாம்.


  உங்கள் டைசன் இணைக்கப்பட்ட தயாரிப்புக்கும், மூன்றாம் தரப்பினரின் தயாரிப்புக்கும் இடையே பகிர்ந்துக்கொள்ளப்படும் தகவல்களைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், privacy@dyson.comல் எங்கள் அந்தரங்கக் குழுவுடன் தொடர்பு கொள்ளவும்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • மூன்றாம் தரப்பு வலைதளங்களுக்கான லிங்குகள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  நாங்கள் டைசனால் இயக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத வேறு வலைதளங்களுக்கு லிங்குகளை வழங்கக்கூடும்.


  இதில் எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை, அந்த வலைதளங்களின் பொருளடக்கத்திற்கோ, உங்களின் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினர்கள் எப்படி சேகரித்து பயன்படுத்துகின்றனர் என்பதற்கோ நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் மூன்றாம் தரப்பு வலைதளங்களை ஆதரிக்கவோ, அவற்றின் சார்பாகக் கருத்து சொல்லவோ மாட்டோம். மூன்றாம் தரப்பு வலைதளங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் மற்றும் பகிர்ந்துக் கொள்கிறார்கள் என்பதை விவரிக்கும் அவர்களுக்கென சொந்த தகவல் பாதுகாப்புத் திட்டங்களை வைத்திருக்கக்கூடும். 


  உங்களின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு, பகிரப்படும் விதம் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா என்பதை உறுதி செய்ய நீங்கள் இந்த வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன் அவற்றின் தகவல் பாதுகாப்புத் திட்டங்களை கவனமாகத் திறனாய்வு செய்ய வேண்டும்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • நாங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களை எவ்வளவு காலம் வைத்திருப்போம்?
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  நாங்கள் எங்களுக்குத் தேவைப்படும் காலம் வரை, இந்த தகவல் பாதுகாப்புத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்குப் பயன்படுத்த இயலும்வரை, மற்றும் சட்டப்படி நாங்கள் எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டுமோ அதுவரை உங்களின் தனிப்பட்ட தகவல்களை வைத்திருப்போம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • உங்களின் கட்டுப்பாடுகள் மற்றும் விருப்பங்கள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தகவல்கள் துல்லியமாக உள்ளதா மற்றும் உங்கள் விருப்பங்களைப் பிரதிபலிக்கிறதா என்பதை உறுதி செய்ய, அதன் கட்டுப்பாட்டை நாங்கள் உங்களுக்கு அளிப்போம்.


  உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தும், அப்டேட் செய்யும் மற்றும் திருத்தும் உரிமை உங்களுக்கு உள்ளது. நீங்கள் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நீக்குமாறு அல்லது அதன் பயன்பாட்டை வரம்புக்குட்படுத்துமாறு எங்களிடம் கேட்கலாம் (உங்களின் விருப்பங்களை அப்டேட் செய்வது பற்றிய முந்தைய பகுதியைப் பாருங்கள்).


  உங்கள் நாட்டின் சட்டம் இதனை பயன்படுத்த ஒரு கட்டணத்தை விதிக்க எங்களை அனுமதித்தால், உங்கள் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இதனை நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.


  உங்களின் தனிப்பட்ட தகவல்களை அப்டேட் செய்ய, திருத்த அல்லது நீக்க உங்களிடம் கட்டணம் வசூலிக்க மாட்டோம்.


  உங்களின் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் பயன்படுத்த, அப்டேட் செய்ய அல்லது திருத்த விரும்பினால் அல்லது, நாங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்களை நீக்க வேண்டுமென்றோ, அல்லது அதன் பயன்பாட்டை வரம்புக்குட்படுத்த வேண்டுமென்றோ நீங்கள் விரும்பினால் privacy@dyson.comக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எப்படி பாதுகாப்போம்?
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. உங்களின் தனிப்பட்ட தகவல்களையும் தனியுரிமையையும் பாதுகாத்து, அவற்றை தொடர்ந்து திறனாய்வு செய்வதற்கு என்க்ரிப்ஷன் போன்ற உகந்த தொழில்நுட்ப, அமைப்புசார் நடவடிக்கைகளைப் பயன்படுத்துவோம். நாங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களை நிஜ பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு கட்டுப்பாடுகளை சேர்த்து பயன்படுத்தி பாதுகாப்போம். இதில் உங்களின் தனிப்பட்ட தகவல்களும் டேட்டாவும் நிகழ்முறைப்படுத்தப்படும், நிர்வகிக்கப்படும் மற்றும் கையாளப்படும் விதத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவதும் அடங்கும். உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் எங்கள் பணியாளர்கள் போதுமான பயிற்சி பெற்றிருப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம். எங்களின் நிகழ்முறைகளின்படி நாங்கள் எப்போதாவது உங்களிடம் உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு அடையாள ஆதாரத்தைக் கேட்போம்.


  எதிர்பாராத சூழ்நிலையில் நாங்கள் பாதுகாப்பு மீறலை அனுபவிப்போம். இதில் உங்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு நாங்கள் அளிக்கும் பாதுகாப்பு பாதிக்கப்படலாம். இது பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • உங்களின் தனிப்பட்ட தகவல்களின் டேட்டாவை அனுப்புதல், சேமித்தல் மற்றும் உலகளவில் கையாளல் டைசன் யுனைட்டட் கிங்டத்தை (UK) தலைமையகமாகக் கொண்டுள்ளது.
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  நீங்கள் வசிக்கும் நாட்டில் நாங்கள் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்போம். 


  பிறகு அந்த தகவல்களை ஐரோப்ப பொருளாதார பகுதியில் (EEA) வைத்து, சேமிப்போம். உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிர்ந்துக் கொள்ளும் அந்த மூன்றாம் தரப்பினர்கள் யூ.கே.க்கு வெளியேயும், EEAக்கு வெளியேயும், அவர்களின் நிறுவனங்கள் உள்ள மற்ற நாடுகளுக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை கையாளவோ அல்லது அனுப்பவோகூடும்.


  எங்களால் அல்லது உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிர்ந்துக் கொள்ளும் மூன்றாம் தரப்பினர்களால் அனுப்பப்படும் தகவல்கள், மற்றும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் கையாளும் விதம் அனைத்தும் எங்களுக்குப் பொருந்தும் சட்டங்களுக்கு இணங்கி இருக்கும். எந்த சூழ்நிலையிலும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை அனுப்புதல், சேமித்தல் மற்றும் கையாளல் இந்த தகவல் பாதுகாப்புக் கொள்கையால் தொடர்ந்து நிர்வகிக்கப்படும்.


  உங்களின் தனிப்பட்ட தகவல்களை எங்களுக்கு சமர்ப்பிப்பதன் மூலம், மற்றும் எங்கள் வலைதளங்கள், அப்கள் (apps) அல்லது கனெக்டட் ப்ராடக்ட்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்த முறையில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் அனுப்புவதற்கு, சேமிப்பதற்கு மற்றும் கையாள்வதற்கு சம்மதிக்கிறீர்கள்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • குழந்தைகள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  டைசனின் வலைதளங்கள், அப்கள் (apps) மற்றும் ப்ராடக்ட்கள் குழந்தைகளை இலக்காகக் கொண்டதல்ல. நாங்கள் எந்த தனிப்பட்ட தகவல்களையும் குழந்தைகளிடமிருந்து தெரிந்தே சேகரிப்பதில்லை.


  நீங்கள் குழந்தையாக இருந்தால் எங்கள் வலைதளங்கள், அப்கள் (apps) அல்லது ப்ராடக்ட்களின் பதிவுபெற்ற பயனராக மாறவோ, உங்களின் எந்தவித தனிப்பட்ட தகவல்களை எங்களுக்கு அளிக்கவோ முயற்சிக்காதீர்கள். நாங்கள் கவனக்குறைவாக ஒரு குழந்தையிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைப் பெற்றது எங்களுக்குத் தெரியவந்தால், முடிந்தவரை விரைவாக அந்த தகவலை அழித்துவிடுவோம்.


  ஒரு குழந்தை அதன் தனிப்பட்ட தகவல்களை எங்களுக்கு அளித்தது தெரிந்தால், privacy@dyson.comல் எங்களைத் தொடர்புக் கொள்ளுங்கள்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • டைசன் வேலைவாய்ப்புக்கள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  டைசன் வேலைவாய்ப்புக்கள் வலைதளம் நீங்கள் கேட்ட தகவல்கள் அல்லது சேவைகளை உங்களுக்கு அளிப்பதற்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தும். இதில் டைசனில் வேலைக்கான உங்கள் விண்ணப்பத்திற்கு உதவுவதும் அடங்கும். 


  டைசன் வேலை வாய்ப்புகள் வலைதளத்தைப் பயன்படுத்தும்போது நாங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களை எப்படி பயன்படுத்துவோம் என்பது பற்றிய மேலும் தகவலுக்கு https://careers.dyson.com/privacy-policy என்பதைப் பாருங்கள்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • இந்த தகவல் பாதுகாப்புத் திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்
  நாங்கள் ஆண்டிற்கு ஒருமுறை இந்த தகவல் பாதுகாப்புத் திட்டத்தைத் திறனாய்வு செய்து, அப்டேட் செய்வோம். இறுதியாக இது அப்டேட் செய்யப்பட்ட தேதியை நாங்கள் கீழே குறிப்போம்.
  எங்களின் தகவல் பாதுகாப்புத் திட்டத்தை மாற்றினால், மாற்றங்கள் பற்றிய விவரங்களை கீழே அளிப்போம். எங்களிடம் உங்களின் மின்னஞ்சல் முகவரி இருந்தால், அந்த மாற்றங்கள் பற்றிய தகவல்களை உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம். தேவைப்பட்டால், இந்த மாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா என்பதை உறுதி செய்யுமாறும் கேட்போம்.
  நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை மீற மாட்டோம். உங்களின் சம்மதத்துடன் உங்களைப் பற்றி நாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்களுக்கு குறைவான பாதுகாப்பை அளிக்கும் வகையில் எங்களின் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் எப்போதும் மாற்ற மாட்டோம்.  


  இந்த தகவல் பாதுகாப்புத் திட்டம் இறுதியாக ஜூன் 2017ல் திறனாய்வு செய்யப்பட்டது மற்றும் அப்டேட் செய்யப்பட்டது.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • இந்த தகவல் பாதுகாப்புத் திட்டத்தில் செய்யப்பட்ட முந்தைய மாற்றங்கள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்
  ஜூன் 2017 – உங்கள் வீட்டிலுள்ள (அலெக்ஸா (Alexa) என்று அழைக்கப்படும் அமேஸான் எக்கோ (Amazon Echo) போன்ற) ஒரு சில மூன்றாம் தரப்பு தயாரிப்புகள் உங்கள் டைசன் தயாரிப்புகளுடன் இணைந்து செயல்பட, எங்களுடைய சில இணைக்கப்பட்டத் தயாரிப்புகளுக்கு, இணைந்து செயல்படும் திறனை உருவாக்கியுள்ளோம்.


  மார்ச் 2016 – புதிய தகவல் பாதுகாப்புத் திட்டங்களுடன் நிறுவப்பட்ட உலகளாவிய தகவல் பாதுகாப்பு போர்ட்டல்.
  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • இந்த தகவல் பாதுகாப்புத் திட்டத்தின் மொழிபெயர்ப்புகள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்
  இந்த தகவல் பாதுகாப்புத் திட்டம் ஆங்கிலத்திலிருந்து பல்வேறு நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் எங்கள் வலைதளங்கள், அப்கள் (apps) மற்றும் கனெக்டட் ப்ராடக்ட்களைப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கு தெளிவானதாகவும், எளிதில் பயன்படுத்தத்தக்கதாகவும் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் இதனை செய்துள்ளோம். 

  இந்த தகவல் பாதுகாப்புத் திட்டத்தின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளுக்கிடையே ஏதேனும் பிரச்னைகள் அல்லது முரண்பாடுகள் இருந்தால், ஆங்கில பதிப்பு செல்லுபடியாகும்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • எங்களைத் தொடர்புக் கொள்ளுங்கள்
  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்
  உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், கருத்துக்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், அல்லது உங்களைப் பற்றி எங்களிடம் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தியது பற்றி புகாரளிக்க விரும்பினால், எங்கள் தகவல் பாதுகாப்புக் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


  எங்களிடம் பேசிய பிறகு, எங்களின் பதில் உங்களுக்குத் திருப்திகரமாக இல்லையென்றால், நீங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவது பற்றிய புகார்களைக் கையாள்வதற்கு பொறுப்பேற்றிருக்கும் உங்கள் நாட்டில் உள்ள உகந்த கட்டுப்பாட்டாளர் அல்லது ஆணையத்தைத் தொடர்புக் கொள்ளலாம்.   


  நீங்கள் எந்த நேரத்திலும் privacy@dyson.comல் எங்களின் தகவல் பாதுகாப்புக் குழுவைத் தொடர்புக் கொள்ளலாம். நாங்கள் முடிந்தவரை உங்களுக்கு விரைவாக பதிலளிப்போம்.
  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்