உலகளாவிய குக்கீ கொள்கை

நவம்பர் 2019

அறிமுகம்

பெரும்பாலான வலைத்தளங்களைப் போலவே, Dyson வலைத்தளங்களும் குக்கீகளைப் பயன்படுத்துகின்றன. "குக்கீகள்" என்பது உங்கள் இணைய ப்ரௌசர் வழியாக வலைத்தளங்கள் உங்கள் சாதனத்தில் சேமிக்கும் சிறிய உரைக் கோப்புகள். 1990 -களின் நடுவில் இருந்து இவை பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றன, மேலும் இணையத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களில் இவை ஒன்றாகும். பல அத்தியாவசிய வலைத்தள செயல்பாடுகள் குக்கீகள் மீது ஆதாரப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உங்கள் ஷாப்பிங் கூடையில் நீங்கள் சேர்ப்பதை நினைவில் வைத்துக் கொள்ள அவை பயன்படுத்தப்படுவதால் அவை இல்லாமல் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய முடியாது.

Dyson -இல் நாங்கள் பயன்படுத்தும் சில குக்கீகள் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும். சேகரிக்கப்பட்ட எந்தவொரு தனிப்பட்ட தகவல்களும் எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு ஏற்ப பயன்படுத்தப்படும். எங்கள் வலைத்தளங்களை செயல்புரிய அனுமதிக்க குக்கீகள் உள்ளன, மேலும் எங்கள் வலைத்தளங்களின் பார்வையாளர்களுக்கு என்ன தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன.

குக்கீ கோட்பாடுகள்

இந்த குக்கீகள் கொள்கை உலகெங்கிலும் உள்ள அனைத்து வலைத்தளங்களிலும் Dyson குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை விவரிக்கிறது. இந்த குக்கீகள் கொள்கையில், நாங்கள் "Dyson", "எங்களுக்கு", "நாங்கள்" அல்லது "எங்கள்" என்று குறிப்பிடும்போது, அதற்கு Dyson குழு நிறுவனம் அல்லது உங்களுக்கு குறிப்பிட்ட வலைத்தளத்தை வழங்கும் நிறுவனங்கள் என்று பொருள் ஆகும்.


உங்கள் ஒப்புகை

எங்கள் வலைத்தளங்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், இந்த குக்கீகள் கொள்கையில் கூறப்பட்டபடி, உங்கள் சாதனத்தில் குக்கீகள் அமைக்கப்படும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

முழுமையான டிச் குக்கிக் கொள்கையை வாசிக்க விரி

சுருக்கு குக்கிக் கொள்கையை

 • நாங்கள் குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  எங்கள் வலைத்தளங்களில் உள்ள பல குக்கீகள் அத்தியாவசிய செயல்பாடுகளைச் செய்கின்றன, மேலும் எங்கள் வலைத்தளங்களுக்குள்ளே உலாவவும் அவற்றின் அம்சங்களைப் பயன்படுத்தவும் உங்களுக்கு உதவுகின்றன; எடுத்துக்காட்டாக, உங்கள் Dyson கணக்கில் நீங்கள் உள்நுழையும்போது, அவை உங்கள் கணக்கில் உள்ள தகவல்களை நினைவில் வைத்துக்கொள்கின்றன. இந்தக் கொள்கையில் நாங்கள் இந்த குக்கீகளை "கண்டிப்பாகத் தேவைப்படும் குக்கீகள்" என்று குறிப்பிடுகிறோம்.

  பிற குக்கீகள் அவசியம் இல்லை, ஆனால் பார்வையாளர்களால் எங்கள் வலைத்தளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன, இதன் மூலம் நாங்கள் ஆன்லைனில் செய்வதை எங்களால் மேம்படுத்த முடியும். இதற்காக வெப் அனலிட்டிக்ஸ் கருவிளை நாங்கள் பயன்படுத்துகிறோம். எங்கள் வலைத்தளங்கள் பதிவேறுவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கிறது, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, எங்கள் தளங்களுக்கு வருபவர்கள் எந்த தகவல்களை அதிகம் பார்க்கிறார்கள் போன்ற விஷயங்களை அவை ஆராய்கின்றன. இது எங்கள் வலைத்தளங்கள் செயல்படும் முறையை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது, எடுத்துக்காட்டாக, நீங்கள் தேடுவதை எளிதாகக் கண்டுபிடிப்பதை உறுதி செய்வது. எதிர்பார்த்தபடி செயல்படாத எங்கள் வலைத்தளங்களின் எந்த பகுதிகளையும் அடையாளம் காண அவை உதவுகின்றன - எனவே நாங்கள் பிரச்சனைகளை சரிசெய்து எங்கள் வலைத்தளங்களை உங்களுக்கும் பிற பயனர்களுக்கும் சிறந்ததாக்கலாம். இந்தக் கொள்கையில் இந்த குக்கீகளை "அனலிட்டிக்ஸ் குக்கீகள்" என்று குறிப்பிடுகிறோம்.

  எங்கள் வலைத்தளங்களுக்கு நீங்கள் திரும்ப வருகை புரியும்போது உங்களை அடையாளம் காண கூடுதல் குக்கீகள் எங்கள் வலைத்தளங்களை அனுமதிக்கின்றன. இது நீங்கள் செய்யும் தேர்வுகளை (உங்கள் பயனர் பெயர், மொழி அல்லது நீங்கள் இருக்கும் பகுதி போன்றவை) நினைவில் வைத்துக் கொள்ளவும், மேம்பட்ட, மேலும் தனிப்பட்ட அம்சங்களை வழங்கவும் எங்களுக்கு உதவுகிறது. இந்தக் கொள்கையில் இந்த குக்கீகளை "செயல்புரியும் குக்கீகள்" என்று குறிப்பிடுகிறோம்.

  மற்றொரு வகை குக்கீ எங்கள் ஆன்லைன் விளம்பரம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதையும், எங்கள் ஆன்லைன் விளம்பரங்களை எங்கு வைக்க வேண்டும் என்பதையும் எங்களுக்குத் தெரிவிக்கிறது. Google அல்லது Yahoo போன்ற மற்றொரு வலைத்தளத்தில் உள்ள எங்கள் விளம்பரங்களில் ஒன்று பார்வையாளரை Dyson வலைத்தளத்திற்கு அனுப்பியிருக்கிறதா என்பதை இந்த குக்கீகள் எங்களுக்குத் தெரியப்படுத்துகின்றன.

  இந்த வகை குக்கீ, Dyson தயாரிப்புகளில் அதிக ஆர்வமுள்ளவர்களை நாங்கள் சென்றடைய உதவுகிறது. எனவே நீங்கள் ஒரு Dyson வலைத்தளத்தைப் பார்வையிட்டால், எங்கள் விளம்பரங்களை மற்ற தளங்களில் நீங்கள் காணலாம். இது மறு-சந்தைப்படுத்தல் அல்லது நடத்தைசார்ந்த விளம்பரம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது உங்கள் விளம்பரங்களுக்கு எங்கள் விளம்பரங்களை மிகவும் பொருத்தமானதாக மாற்ற பயன்படுகிறது. இந்தக் கொள்கையில் இந்த குக்கீகளை "இலக்கிடுகின்ற குக்கீகள்" என்று குறிப்பிடுகிறோம்.

  குக்கீகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை Dyson -இன் வாடிக்கையாளராக நாங்கள் உங்களிடம் வைத்திருக்கும் எந்தவொரு பதிவுகளுடனும் இணைக்கிறோம். எடுத்துக்காட்டாக, தயாரிப்பின் பிரபலத்தன்மையின் சுயவிவரக்குறிப்பு மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வு, Dyson வலைத்தளம் அல்லது செயலிகளைப் பயன்படுத்தும் போது உங்கள் நடத்தை அல்லது Dyson தயாரிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன ஆகியவற்றுக்காக தனிப்பட்ட தகவல்களுடன் கூடிய குக்கீகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை, எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் அல்லது Dyson தயாரிப்புகளின் தகவல்களை நாங்கள் இணைக்கிறோம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • Dyson பயன்படுத்தும் குக்கீகளின் வகைகள்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  குக்கீகள் இரண்டு பொது வகைகளாகும்: முதல் தரப்பு குக்கீகள் (நாங்கள் அமைப்பவை) மற்றும் மூன்றாம் தரப்பு குக்கீகள் (அவை மூன்றாம் தரப்பினரால் அமைக்கப்படுகின்றன).  முதல் தரப்பு குக்கீகள்


  இந்த குக்கீகள் Dyson -இல் எங்களால் அமைக்கப்படுகின்றன. பெரும்பாலும், அவை எங்கள் வலைத்தளத்தில் அத்தியாவசிய செயல்பாட்டை செயல்படுத்துகின்றன. அவை எங்கள் சொந்த வெப் அனலிட்டிக்ஸ் குக்கீகளையும் உள்ளடக்குகின்றன, அவற்றை எங்கள் வலைத்தளங்களை மேம்படுத்துவதற்காக, அவை பார்வையாளர்களால் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படுத்துகிறோம்.  மூன்றாம் தரப்பு குக்கீகள்


  மூன்றாம் தரப்பு குக்கீகள் Dyson -ஆல் அமைக்கப்படுவதில்லை, ஆனால் நாங்கள் இணைந்து பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரால் அமைக்கப்படுகின்றன. இந்த மூன்றாம் தரப்பு குக்கீகள் சில பயனுள்ள சேவைகளை செயல்படுத்துகின்றன, எடுத்துக்காட்டாக ஆன்லைன் கேள்வித்தாள்கள் அல்லது லைவ் சாட் (இது Dyson நிபுணரை கேள்விகளைக் கேட்க உங்களை அனுமதிக்கிறது). மற்றவை உங்கள் ப்ரௌசிங் செயல்பாடுகளைக் கண்காணிக்க எங்களுடன் பணிபுரியும் விளம்பர நெட்வொர்க்குகள் மூலம் அமைக்கப்படலாம், இதனால் அவர்கள் எங்கள் ஆன்லைன் விளம்பரங்களை மிகவும் பொருத்தமான இடங்களில் வைக்க முடியும். "குக்கீகளை நிர்வகித்தல்" குறித்த கீழேயுள்ள பிரிவில், உங்கள் அமைப்புகளை எவ்வாறு மாற்றலாம் என்பதை நாங்கள் விளக்குகிறோம், இதன் மூலம் நீங்கள் கண்காணிக்கப்பட விரும்பவில்லை என்று மூன்றாம் தரப்பினருக்கு (விளம்பரதாரர்கள் உட்பட) தெரியும்.  Social media சமூக ஊடகக் குக்கீகள்


  எங்கள் வலைத்தளங்களில் சில பக்கங்கள் LinkedIn, Facebook மற்றும் Twitter போன்ற சமூக ஊடகத் தளங்கள் மூலம் எங்கள் உள்ளடக்கத்தைப் பகிர அனுமதிக்கின்றன. சில நேரங்களில் YouTube போன்ற தளங்களிலிருந்து வீடியோக்களை நாங்கள் உட்பொதிக்கலாம். இந்த தளங்கள் அவற்றின் சொந்த குக்கீகளை அமைக்கின்றன, அவற்றின் மீது எங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. அந்த சமூக ஊடகத் தளங்களுக்கு அவற்றின் சொந்த குக்கீகள் கொள்கைகள் இருக்கலாம், இருக்கும் பட்சத்தில், அவை பொதுவாக அவற்றின் வலைத்தளங்களில் இருக்கும். அந்த குக்கீகள் கொள்கைகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா என்பதை உறுதிசெய்ய நீங்கள் அவற்றைக் கவனமாக மீளாய்வு செய்ய வேண்டும்.

  மேலே உள்ள மூன்று வகைகளைச் சேர்ந்த குக்கீகளை செஷன் குக்கீகளா அல்லது நிரந்தரக் குக்கீகளா என்பதைப் பொறுத்து மேலும் வகைப்படுத்தலாம்.  செஷன் குக்கீகள்


  உங்கள் ப்ரௌசரை மூடும்போது இந்த குக்கீகள் காலாவதியாகிவிடும் (அல்லது நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் செயலற்ற நிலையில் இருந்தால்). அவை எங்கள் இ-காமர்ஸ் வலைத்தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன, இதன்மூலம் உங்கள் ஷாப்பிங் கூடையில் வைத்திருப்பதை நீங்கள் இழக்காமல் உலாவலைத் தொடரலாம்.  நிரந்தரக் குக்கீகள்


  ப்ரௌசர் மூடப்பட்டாலும் இந்த குக்கீகள் நீடிக்கும். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு வலைத்தளத்தைப் பார்வையிடும்போது கடவுச்சொற்களை மீண்டும் உள்ளிடவும் தகவல்களை உள்ளிடவும் தேவையில்லை என்பதற்காக அவை உங்களை நினைவில் வைக்கப் பயன்படுகின்றன.

  நாங்கள் பயன்படுத்தும் சில தனிப்பட்ட குக்கீகள் மற்றும் அவற்றை நாங்கள் பயன்படுத்தும் நோக்கங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • குக்கீகளை நிர்வகித்தல்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  மிகவும் பிரபலமான வெப் ப்ரௌசர்கள் அனைத்தும் குக்கீகளை நிர்வகிக்க உங்களை அனுமதிக்கின்றன.  வெவ்வேறு வெப் ப்ரௌசர்களில் குக்கீகளை எவ்வாறு நிர்வகிப்பது


  பெரும்பாலான ப்ரௌசர்கள் குக்கீகளை முடக்கிவிட அனுமதிக்கும். குக்கீகளை முடக்குவது எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் என்பதை நினைவில் கொள்க.

  சில பிரபலமான ப்ரௌசர்களில் குக்கீகளின் அமைப்புகளை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்த தகவல்களை பின்வரும் இணைப்புகள் வழங்குகின்றன:  குக்கீகளை நிர்வகிப்பது பற்றிய கூடுதல் தகவல்


  www.allaboutcookies.org என்பது குக்கீகளைப் பற்றிய விரிவான தகவல்களையும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் கொண்ட ஒரு பயனுள்ள ஆதாரமாகும்.

  'பின்தொடர்ந்து கண்காணிக்க வேண்டாம்' (Do Not Track, DNT) சமிக்ஞைகளுக்கு நாங்கள் தற்போது பதில்வினையாற்றுவதில்லை என்பதை தயவுசெய்து நினைவில் கொள்க.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • இந்த குக்கீ கொள்கைக்கான மாற்றங்கள்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  இந்த கொள்கையை சீரான இடைவெளியில் மீளாய்வு செய்வோம் மற்றும் தேவையானால் புதுப்பிப்போம் மற்றும் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதியை கீழே குறிப்பிடுவோம்.

  எங்கள் குக்கீகள் கொள்கையை நாங்கள் மாற்றினால், மாற்றங்களின் விவரங்களை கீழே அறிவிப்போம்.

  இந்த கொள்கை கடைசியாக மீளாய்வு செய்யப்பட்டு நவம்பர் 2019 -இல் புதுப்பிக்கப்பட்டது

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • இந்த குக்கீ கொள்கைக்கான முந்தைய மாற்றங்கள்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  நவம்பர் 2019

  தற்போதைய செயலாக்க நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில் குக்கீ கொள்கை புதுப்பிக்கப்பட்டது.


  மார்ச் 2018

  வெவ்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தகவல்களின் வகைகளை Dyson எவ்வாறு ஒருங்கிணைக்கிறது என்பதற்கான மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் குக்கீகள் கொள்கை புதுப்பிக்கப்பட்டது.


  மார்ச் 2016

  உலகளாவிய தனியுரிமை போர்ட்டல் புதிய குக்கீ கொள்கைகளுடன் தொடங்கப்பட்டது.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • இந்த குக்கீ கொள்கையின் மொழிபெயர்ப்புகள்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  இந்த குக்கீகள் கொள்கை ஆங்கிலத்திலிருந்து பல்வேறு நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எங்கள் வலைத்தளங்கள், செயலிகள் மற்றும் இணைக்கப்பட்ட தயாரிப்புகளின் அனைத்து பயனர்களுக்கும் கொள்கை தெளிவாக உள்ளதையும் அணுகக்கூடியவாறு இருப்பதையும் உறுதிப்படுத்த நாங்கள் இதைச் செய்துள்ளோம். இந்த குக்கீகள் கொள்கையின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளுக்கு இடையில் ஏதேனும் மோதல்கள் அல்லது முரண்பாடுகள் இருந்தால், ஆங்கிலப் பதிப்பு ஆதிக்கம் செலுத்தும்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • எங்களை தொடர்பு கொள்ளவும்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  ஏதேனும் கேள்விகள், கருத்துகள் அல்லது கவலைகள் இருந்தால், எங்கள் தனியுரிமைக் குழுவுக்கு privacy@dyson.com -இல் மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது கூடுதல் தொடர்பு விவரங்களைப் பயன்படுத்தலாம். நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்