உலகளாவிய தனியுரிமைக் கொள்கை

நவம்பர் 2019

அறிமுகம்

Dyson -இல் உங்கள் தனிப்பட்ட தரவு பாதுகாக்கப்படுவதையும் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய நாங்கள் உறுதியேற்றுள்ளோம்.

உங்கள் தனிப்பட்ட தரவை எங்களுடன் பகிர்வதன் மூலமும், எங்கள் வலைத்தளங்கள், செயலிகள் மற்றும் இணைக்கப்பட்ட தயாரிப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமும், இந்த தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளை நீங்கள் படித்துவிட்டீர்கள் என்றும் அவற்றைப் புரிந்து கொண்டீர்கள் என்றும் உறுதிப்படுத்துகிறீர்கள். உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் மற்றும் நாங்கள் அதை எவ்வாறு கையாளுகிறோம் என்பதில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதையும் அதன் மீது உங்களுக்கு கட்டுப்பாட்டைக் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

நாங்கள் என்ன தனிப்பட்ட தரவை சேகரிக்கிறோம், அதை ஏன் சேகரிக்கிறோம், அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம், உங்கள் தனிப்பட்ட தரவு மீது உங்களுக்கு உள்ள கட்டுப்பாடு மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க எங்களிடம் உள்ள நடைமுறைகள் ஆகியவற்றை எங்கள் தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது. இது எங்கள் Dyson வலைத்தளங்கள் மூலம், Dyson செயலிகள் மூலம் (Dyson இணைப்பு உட்பட), எங்கள் இணைக்கப்பட்ட தயாரிப்புகள் மூலம் (கீழே மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது) மற்றும் எங்கள் Dyson சில்லறை விற்பனைக் கடைகளில் அல்லது ஸ்டாண்டுகள் மற்றும் நிகழ்வுகளில் நேரில் சேகரிக்கும் தனிப்பட்ட தரவுகளுக்கு பொருந்தும்.

இந்த தனியுரிமைக் கொள்கையில், நாங்கள் "Dyson", "எங்களுக்கு", "நாங்கள்" அல்லது "எங்கள்" என்று குறிப்பிடும்போது, நாங்கள் Dyson வலைத்தளங்கள், செயலிகள் அல்லது இணைக்கப்பட்ட தயாரிப்புகளை உங்களுக்கு வழங்குகின்ற அல்லது உங்கள் நாட்டில் கடைகள், நிலைகள் அல்லது நிகழ்வுகளுக்கு பொறுப்பான Dyson குழு நிறுவனம் அல்லது நிறுவனங்களைக் குறிப்பிடுகிறோம். உங்களைப் பற்றி சேகரிக்கப்பட்ட எந்தவொரு தனிப்பட்ட தரவிற்கும் முதன்மையாக எந்த Dyson குழு நிறுவனம் அல்லது நிறுவனங்கள் பொறுப்பேற்கின்றன என்பது குறித்த தகவல்கள் [மற்றும் Dyson -இன் தரவு பாதுகாப்பு அதிகாரி(களு)க்கான தொடர்பு விவரங்கள்], இந்த தனியுரிமைக் கொள்கையின் முடிவில் "எனது தனிப்பட்ட தரவுகளுக்கு எந்த Dyson குழு நிறுவனம் பொறுப்பேற்கும்?" என்ற தலைப்பில் உள்ள தொடர்புகளில் கிடைக்கின்றன. இந்த தனியுரிமைக் கொள்கையில், நாங்கள் "Dyson குழு" என்று குறிப்பிடும்போது, எல்லா Dyson குழு நிறுவனங்களையும் குறிப்பிடுகிறோம்.

இந்த தனியுரிமைக் கொள்கையின் எந்த ஒரு அம்சம் குறித்து அல்லது Dyson உங்கள் தகவல்களை எவ்வாறு கையாளுகிறது என்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், கருத்துகள் அல்லது கவலைகள் இருந்தால், தயவுசெய்து எங்கள் தனியுரிமைக் குழுவிற்கு privacy@dyson.com என்ற மின்னஞ்சல் முகவரியில் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

தனியுரிமைக் கோட்பாடுகள்

தனியுரிமைக் கொள்கைகள் சிக்கலானவையாக இருக்கலாம். எங்கள் கொள்கைகளை முடிந்தவரை தெளிவாகவும் அணுகக்கூடியதாகவும் செய்ய முயற்சித்துள்ளோம். உங்களுக்கு உதவும் பொருட்டு, Dyson -இல் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பதையும் கீழேயுள்ள எங்கள் தனியுரிமைக் கொள்கைகளில் சுருக்கமாகக் கூறியுள்ளோம். இந்த கோட்பாடுகள் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் உங்கள் தனிப்பட்ட தரவை சரியான வழியிலும் அது எவ்வாறு கையாளப்படவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ அவ்வாறு கையாளுவதன் மீதும் எங்களுக்கு உள்ள கடமைப்பாட்டை நிரூபிக்கின்றன.


Dyson -இல் நாங்கள்:

 1. எங்கள் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சேவை, தயாரிப்புகள் மற்றும் அனுபவங்களை வழங்கவும் மேம்படுத்தவும் எங்களுக்குத் தேவைப்படும் தனிப்பட்ட தரவை மட்டுமே நாங்கள் கேட்போம் அல்லது சேகரிப்போம்.
 2. நாங்கள் வைத்திருக்கும் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவு துல்லியமானது மற்றும் உங்கள் விருப்பங்களை பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்த உங்களுக்கு கட்டுப்பாட்டை அளிப்போம்.
 3. உங்கள் தனிப்பட்ட தரவு எப்போதும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதை உறுதிசெய்வோம்.
 4. நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் நியாயமாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறோம்.
 5. உங்கள் தனிப்பட்ட தரவை, நாங்கள் அதை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தவேண்டும் என்று நீங்கள் நம்பினீர்களோ அதற்கு மட்டுமே எப்போதும் பயன்படுத்தவோம்.
 6. உங்கள் தனிப்பட்ட தரவை ஒருபோதும் விற்க மாட்டோம், அதை எங்கள் தனியுரிமைக் கொள்கையில் கோடிட்டுக் காட்டியபடி அல்லது நீங்கள் எங்களிடம் கேட்கும்போது மட்டுமே பகிர்வோம்.
 7. உங்கள் விருப்பங்களுக்கு மதிப்பளிக்கிறோம் மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதிக்கக்கூடிய அல்லது அதை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் முக்கியமான மாற்றங்கள் இருந்தால் உங்களுக்குத் தெரிவிப்போம்.
 8. நாங்கள் வைத்திருக்கும் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவுகளுக்கு பொறுப்பேற்கிறோம்.

முழுமையான டிச் தனியுரிமை கொள்கை படிக்க விரி

சுருக்கு தனியுரிமை கொள்கை

 • நாங்கள் என்ன தனிப்பட்ட தரவை சேகரிக்கிறோம்?

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  உங்களைப் பற்றிய ஒவ்வொரு தனிப்பட்ட விவரங்களையும் சேகரிப்பதில் எங்களுக்கு ஆர்வமில்லை. நீங்களும் எங்கள் வாடிக்கையாளர்களும் எங்களிடமிருந்து எதிர்பார்க்கும் சேவை, தயாரிப்புகள் மற்றும் அனுபவங்களை வழங்குவதும் மேம்படுத்துவதுமே உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிப்பதற்கான எங்கள் முக்கிய காரணம் ஆகும்.

  தனிப்பட்ட தரவு என்பது உலகம் முழுவதும் சற்று வித்தியாசமாக வரையறுக்கப்படுகிறது. உங்கள் தனியுரிமை மற்றும் உங்கள் தகவல் பாதுகாக்கப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு, உங்களை அல்லது மற்றொரு நபரை அடையாளம் காணப் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு தகவலையும் தனிப்பட்ட தரவு என்று நாங்கள் வரையறுக்கிறோம்.

  உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவை நாங்கள் பல்வேறு வழிகளில் சேகரிக்கிறோம். இந்த பிரிவில், உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிக்கும் பல்வேறு வழிகளையும் அந்தத் தகவல் பயன்படுத்தப்படும் வழிகளையும் நாங்கள் விளக்குகிறோம். உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, "உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?" என்ற தலைப்பைப் பார்க்கவும்.  நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தகவல்


  எங்கள் வலைத்தளம், செயலிகள், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகவோ அல்லது எங்கள் கடைகள், ஸ்டாண்ட்டுகள் மற்றும் நிகழ்வுகள் அல்லது வேறுவகையில் நேரடியாக எங்களைத் தொடர்பு கொள்ளும்போது அல்லது ஊடாடல்களை செய்யும் போது நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிக்கிறோம்.

  எடுத்துக்காட்டாக, நீங்கள் எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழுக்களைத் தொடர்புகொள்ளும் போது, ஆர்டர் செய்யும் போது, உங்கள் வாரண்டியை பதிவுசெய்யும்போது, ஒரு கருத்தாய்வை, போட்டியை அல்லது கேள்வித்தாளை முடிக்கும்போது, உங்கள் விருப்பங்களை மற்றும் கணக்குத் தகவல்களை புதுப்பிக்கும்போது, Dyson செயலியின் இணைக்கும்போது அல்லது எங்கள் வலைத்தளத்தில் எங்கள் தயாரிப்புகளில் ஒன்றை நீங்கள் மதிப்பிடும்போது நீங்கள் எங்களுக்கு தகவல்களை வழங்குவீர்கள்.

  இந்த ஊடாடல்களின் மூலம் நீங்கள் எங்களுடன் இவற்றைப் பகிர்ந்து கொள்ளக்கூடும்: உங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் மற்றும் பணம் செலுத்தல் தகவல். சில சூழ்நிலைகளில், நீங்கள் கேட்ட ஒரு தயாரிப்பை அல்லது சேவையை உங்களுக்கு வழங்க அந்த தகவல் எங்களுக்குத் தேவைப்படும்; எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு பொருளை வாங்கும்போது உங்கள் பணம் செலுத்தும் தகவலும், அதை உங்களுக்கு அனுப்ப உங்கள் முகவரியும் எங்களுக்குத் தேவைப்படும்.

  உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கும்போது, உங்கள் குடும்பம், உங்கள் வீடு மற்றும் தொழில்நுட்பம், உங்கள் ஒவ்வாமை மற்றும் ஆர்வங்கள் பற்றிய தகவல்களை, மேலும் Dyson குறித்து உங்களை அதிகம் ஈர்க்கும் விஷயங்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். அந்த தகவல்கள் அனைத்தும் விருப்பத்தேர்வுக்குரியவை, அதாவது அதை வழங்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்; Dyson வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது privacy@dyson.com -இல் எங்கள் உலகளாவிய தனியுரிமைக் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ எந்த நேரத்திலும் அதை நீக்குமாறு நீங்கள் எங்களிடம் கேட்கலாம்.

  மற்றவர்களின் தகவல்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டால் (எடுத்துக்காட்டாக, நீங்கள் அந்த நபருக்காக ஒரு Dyson தயாரிப்புப் பொருளை வாங்கியிருந்தால் அல்லது Dyson செயலிக்காக வேறொருவரை பதிவு செய்திருந்தால்), நீங்கள் அவர்களின் தனிப்பட்ட தரவை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மற்றும் இந்த தனியுரிமைக் கொள்கையின்படி அதைப் பயன்படுத்துவதில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று அந்த நபருடன் நீங்கள் சரிபார்க்க வேண்டும்.  Dyson தயாரிப்புகளிலிருந்து தகவல்


  உங்களைப் பற்றியும் உங்கள் Dyson தயாரிப்பு பற்றியும் எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட தரவு மட்டுமல்லாமல், உங்கள் Dyson இணைக்கப்பட்ட தயாரிப்புகளிலிருந்து தனிப்பட்ட தரவை கூட நேரடியாக சேகரிப்போம் மற்றும் கையாளுவோம். இணைக்கப்பட்ட தயாரிப்பு என்பது “ஸ்மார்ட்” ஆன, இணையம் செயல்படுத்தப்பட்டுள்ள, அல்லது Dyson செயலியின் மூலம் இயக்கப்படும் ஒரு Dyson தயாரிப்பு ஆகும்.

  எங்கள் இணைக்கப்பட்ட தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றிய (எடுத்துக்காட்டாக, அவை எப்போது மற்றும் எவ்வளவு காலம் பயன்படுத்தப்படுகின்றன), அவற்றின் பதில்வினையாற்றும் திறன் மற்றும் ஏதேனும் பிழைகள் (அல்லது சாத்தியமான பிழைகள்) பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிப்போம்.

  எங்கள் இணைக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் செயலிகளை நீங்கள் பயன்படுத்தும்போது நாங்கள் சேகரிக்கும் சில தகவல்கள், உங்கள் இணைக்கப்பட்ட தயாரிப்பின் இருப்பிடத்தை தீர்மானிக்க எங்களுக்கு உதவும். குறிப்பாக, உங்கள் இணைக்கப்பட்ட தயாரிப்பை நீங்கள் முதலில் பதிவுசெய்யும்போது உங்கள் அலைபேசியில் (அல்லது பிற சாதனத்தில்) இருப்பிடக் கண்காணிப்பை நீங்கள் இயக்கிட வேண்டும் (இல்லையெனில், எங்களால் அதை இணைக்க முடியாது). உங்கள் இருப்பிடத்தை அறிந்து கொள்வது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், இதன் மூலம் உங்கள் இணைக்கப்பட்ட தயாரிப்பு செயல்படும் சுற்றுச்சூழல் நிலைமைகளை நாங்கள் புரிந்து கொள்ள முடியும் மற்றும் இது இணைக்கப்பட்ட தயாரிப்பின் செயல்திறனை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது.  புளூடூத் அல்லது WiFi மூலம் Dyson லிங்க் ஆப்’உடன் Dyson தயாரிப்பு இணைக்கப்படுவதற்கு, இணைப்புக்கான Android இருப்பிடச் சேவைகளை Dyson பயன்படுத்துகிறது. இந்த இணைப்பின் விளைவாக எந்த இருப்பிடத் தரவையும் Dyson சேகரிப்பதில்லை என்பதைக் கவனிக்கவும்.

  கூடுதலாக, எங்கள் Light Cycle, பின்வருவதற்காகப் பின்புல இருப்பிடச் சேவைகளைப் பயன்படுத்துகிறது:

  தயாரிப்பின் மென்பொருள் புதுப்பிப்புகளைப் பெறுவது
  • தயாரிப்பிலுள்ள நேரத்தை உங்கள் இணைத்துள்ள மொபைல் சாதனத்திலுள்ள நேரத்துடன் ஒத்திசைப்பது
  • உங்கள் தயாரிப்பிற்கான காலத்திட்டங்கள், முன்னுரிமைகள், அமைப்பு மாற்றங்கள் ஆகிய எவற்றையும் ஏற்றுவது மற்றும் திருத்தம் செய்வது
  • உங்கள் விளக்கின் இருப்பிடத்தைப் பொறுத்து, சரியான வெளிச்சச் சுயவிவரத்தைப் பராமரிப்பது


  Light Cycle’ன் இருப்பிடத் தரவானது Dysonக்குள் பெயர்விவரம் மறைக்கப்படுகிறது, ஏனெனில் இருப்பிடத் தரவு தயாரிப்புக்குத் தொடர்புடையது, பயனருக்கு அல்ல. சில குறிப்பிட்ட தகவல்களைச் சேகரிக்காமல் எங்கள் இணைக்கப்பட்ட தயாரிப்புகளில் சிலவற்றை, அல்லது எங்கள் இணைக்கப்பட்ட தயாரிப்புகளின் குறிப்பிட்ட அம்சங்களை சரியாக இயக்க முடியாது. எடுத்துக்காட்டாக, Dyson 360 Eye உங்கள் வீட்டில் ஒரு அறையை வரைபடமாக்க வேண்டும், இதன்மூலம் எங்கு செல்ல வேண்டும் என்று அதற்கு தெரியும்.  உங்கள் ஆன்லைன் ஊடாடல்களிலிருந்து தகவல்


  அந்த தகவல்களை நீங்கள் செயலூக்கமாக எங்களுக்கு வழங்கினாலும் அல்லது எங்கள் வலைத்தளங்களை உலாவினாலும் அல்லது எங்கள் செயலிகளைப் பயன்படுத்தினாலும், எங்கள் வலைத்தளங்கள் மற்றும் எங்கள் செயலிகளின் பயனர்கள் அனைவரிடமிருந்தும் வரையறுக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளையும் சில அநாமதேய, ஒருங்கிணைக்கப்பட்ட புள்ளிவிவரங்களையும் நாங்கள் சேகரித்து சேமிக்கிறோம். நாங்கள் சேகரிக்கும் தகவல்களில் நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் இன்டர்நெட் ப்ரோட்டோகால் (IP) முகவரி, நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசர் மென்பொருள், உங்கள் ஆப்பரேடிங் சிஸ்டம், அணுகிய தேதி மற்றும் நேரம், எங்கள் வலைத்தளத்துடன் இணைக்க நீங்கள் பயன்படுத்தும் வலைத்தளத்தின் இணைய முகவரி, எங்கள் வலைத்தளங்கள் அல்லது செயலிகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவல் ஆகியவை அடங்கும்.

  எங்கள் வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் பயனர்கள் அதிகமாக எதைப் பார்க்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக இந்த தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

  எங்கள் சொந்த வலைத்தளங்களுக்கு வெளியே (எடுத்துக்காட்டாக, Google, YouTube மற்றும் சமூக ஊடகங்களில்) எங்கள் விளம்பர பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்களுடன் நீங்கள் எவ்வாறு ஈடுபடுகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களையும் கூட நாங்கள் சேகரித்து கையாளுகிறோம்.

  அந்த தகவல்கள், முக்கியமாக, குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சேகரிக்கப்படுகின்றன.  குக்கீகள்


  எங்கள் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளில் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். "குக்கீகள்" என்பது உங்கள் இணைய ப்ரௌசர் வழியாக வலைத்தளங்கள் உங்கள் சாதனத்தில் சேமிக்கும் சிறிய உரைக் கோப்புகள். 1990 -களின் நடுவில் இருந்து இவை பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றன, மேலும் இணையத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களில் இவை ஒன்றாகும்.

  Dyson -இல் நாங்கள் பயன்படுத்தும் சில குக்கீகள் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவை சேகரிக்கும். சேகரிக்கப்பட்ட எந்தவொரு தனிப்பட்ட தரவும் இந்த தனியுரிமைக் கொள்கைக்கு ஏற்ப பயன்படுத்தப்படும். எங்கள் வலைத்தளங்களையும் செயலிகளையும் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சாதனத்தில் குக்கீகள் அமைக்கப்படும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

  நாங்கள் பயன்படுத்தும் குக்கீகளின் வகைகள் மற்றும் எங்கள் வலைத்தளங்களில் வைக்கப்பட்டுள்ள குக்கீகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது உள்ளிட்ட கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து எங்கள் குக்கீகள் கொள்கையைப் பார்க்கவும். 'பின்தொடர்ந்து கண்காணிக்க வேண்டாம்' (Do Not Track, DNT) சமிக்ஞைகளுக்கு நாங்கள் தற்போது பதில்வினையாற்றுவதில்லை என்பதை தயவுசெய்து நினைவில் கொள்க.  மின்னஞ்சல் தகவல்தொடர்புகள்


  எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் பயனராக, மின்னஞ்சல் மூலம் உதவிக்கான தகவல்களை உங்களுக்கு அனுப்புவோம். நாங்கள் அவ்வாறு செய்வதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வரை, நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம் என்று நாங்கள் கருதும், Dyson-இல் நடக்கும் எதையும் உங்களுக்கு தெரிவிக்கவும் கூட விரும்புகிறோம்; இது எங்கள் சமீபத்திய தயாரிப்பு பற்றிய அறிவிப்புகள், உரிமையாளருக்கு உள்ள சலுகைகள் அல்லது வரவிருக்கும் நிகழ்வுகள் என இருந்தாலும், எங்களிடமிருந்து நீங்கள் பெறும் தகவல்தொடர்புகளில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எங்களிடமிருந்து நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா என்பதை அல்லது உங்களைத் தொடர்புகொள்வதை நிறுத்தலாமா என்பதை எவ்வாறு புதுப்பிப்பது அல்லது மாற்றுவது என்பதை நீங்கள் கீழே உள்ள 'நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளும் முறையை நீங்கள் எவ்வாறு மாற்ற முடியும்?' -இல் காணலாம்.

  எங்கள் மின்னஞ்சல்களுடன் நீங்கள் எவ்வாறு ஈடுபடுகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்; இவற்றில் அவை உங்களுக்கு வந்து சேர்கிறதா, அவற்றை நீங்கள் திறக்கிறீர்களா, Dyson -இல் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நீங்கள் தேர்வுசெய்கிறீர்களா (எடுத்துக்காட்டாக, எங்கள் மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம்) மற்றும் உங்களை இனி தொடர்பு கொள்ள வேண்டாம் என்று நீங்கள் கேட்கிறீர்களா (எங்கள் அனைத்து மின்னஞ்சல் கடிதங்களிலும் சேர்க்கப்பட்ட குழுவிலக விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம்) போன்றவை அடங்கும்.

  உங்களுக்கு உதவிசெய்வதை அல்லது சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளை அனுப்புவதை நீங்கள் கேட்கும்போது நாங்கள் நிறுத்துகிறோம் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் அந்த தகவலை தானாகவும் உங்கள் வாடிக்கையாளர் பதிவோடு (நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தகவலுடன்) சேர்த்தும் பயன்படுத்துகிறோம். எங்கள் முந்தைய மின்னஞ்சல்களுடன் நீங்கள் எவ்வாறு ஈடுபட்டுகிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் என்று நாங்கள் கருதும் உள்ளடக்கம் மற்றும் அனுபவங்களை உங்களுக்கு வழங்குவதன் மூலம் எங்கள் மின்னஞ்சல்களை முடிந்தவரை சுவாரஸ்யமாக்க நாங்கள் இதைப் பயன்படுத்துகிறோம்; இந்த நோக்கத்திற்காக உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்துவதை ஆட்சேபிக்க உங்களுக்கு உரிமை உண்டு ('உங்கள் கட்டுப்பாடுகள் மற்றும் தேர்வுகள்' என்ற தலைப்பில் கீழே உள்ள பகுதியைப் பார்க்கவும்).  சமூக ஊடகம்


  சமூக ஊடகத்தில் உங்களுடன் தொடர்புகொள்வதை நாங்கள் விரும்புகிறோம். உங்கள் Dyson தயாரிப்புகளைப் பற்றி எங்களைத் தொடர்பு கொள்ள நீங்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் Dyson தயாரிப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தலாம். எங்களைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும், எங்கள் தயாரிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் பற்றியும், சமூக ஊடகம் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பும் நுகர்வோருக்கு உதவுவதற்கும் பொதுவில் கிடைக்கும் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களை நாங்கள் மீளாய்வு செய்கிறோம்.

  Facebook, YouTube, Twitter, Pinterest, Line மற்றும் Snapchat உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களிலிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் சில நேரங்களில் ஆன்லைனில் வைக்கப்பட்டு பொதுவில் கிடைக்கக்கூடிய தனிப்பட்ட தரவையும் உள்ளடக்குகின்றன. நாங்கள் பயன்படுத்தும் எந்தவொரு தகவலுடனும் அதன் மூலமும் முறையாக காண்பிக்கப்படும் அல்லது அவை அநாமதேயமாக்கப்படும் என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

  இந்த ஆன்லைன் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் பொதுவாக உங்கள் தனிப்பட்ட தரவை எவ்வாறு பயன்படுத்துகின்றன மற்றும் பகிர்ந்து கொள்கின்றன என்பதை விளக்கும் தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. உங்கள் தனிப்பட்ட தரவு எவ்வாறு சேகரிக்கப்படுகிறது மற்றும் பகிரப்படுகிறது என்பதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இந்த தளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அந்த தனியுரிமைக் கொள்கைகளை நீங்கள் கவனமாக மீளாய்வு செய்ய வேண்டும்.  எங்கள் கடைகள், ஸ்டாண்டுகள் மற்றும் நிகழ்வுகளில் நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்


  எங்கள் கடைகள், ஸ்டாண்டுகள் மற்றும் நிகழ்வுகளுக்கு நீங்கள் நேரில் வரும்போது உங்களுடைய தனிப்பட்ட தரவை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்; உங்கள் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் பணம் செலுத்தும் தகவல் போன்றவை ("நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தகவல்" என்ற தலைப்பில் மேலே உள்ள பகுதியைப் பார்க்கவும்).

  சி.சி.டி.வி, படம் பிடித்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவுகளையும் சேகரிப்போம். சி.சி.டி.வி கேமராக்கள் முதன்மையாக பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன; எங்கள் கடைகள் சிலவற்றில், போக்குவரத்தை அளவிட அவை எங்களுக்கு உதவும் (அதாவது, எங்கள் கடைகளுக்கு உள்ளே எத்தனை பேர் வருகிறார்கள் மற்றும் எத்தனை பேர் வெளியேறுகிறார்கள்). எங்கள் சில நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகளில் (நாங்கள் ஒரு புதிய கடையைத் திறக்கும்போது போன்றவை) படம் எடுப்போம் மற்றும் புகைப்படம் எடுப்போம்; எங்கள் வணிக நோக்கங்களுக்காக திரைப்படம் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்துகிறோம் (எடுத்துக்காட்டாக, எங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட). உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிப்போம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க, எங்கள் கடைகள், ஸ்டாண்டுகள் மற்றும் நாங்கள் சி.சி.டி.வி பயன்படுத்தும் இடங்கள் அல்லது படங்களை எடுக்க அல்லது புகைப்படம் எடுக்க விரும்பும் இடங்களில் அறிவிப்புகளைக் காண்பிப்போம்.

  எங்கள் கடைகள், ஸ்டாண்டுகள் மற்றும் நிகழ்வுகளுக்கு நீங்கள் வரும்போது உங்கள் அலைபேசியில் (அல்லது பிற சாதனத்தில்) வைஃபை அல்லது புளூடூத் இயக்கப்பட்டிருந்தால், இந்த இடங்களில் நிறுவப்பட்ட பீக்கான்கள் மூலம் உங்கள் சாதனத்திலிருந்து வரையறுக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளையும் நாங்கள் சேகரிப்போம். பீக்கான்கள் என்றால் சிறிய வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர்கள் ஆகும், அவை அருகிலுள்ள ஸ்மார்ட் சாதனங்களுடன் (எ.கா. ஸ்மார்ட்போன்கள்) புளூடூத் மூலம் இணைகின்றன.  மூன்றாம் தரப்பு தரவு வழங்குநர்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல்


  உங்கள் தரவைப் பகிர உங்கள் அனுமதியைப் பெற்றுள்ள மூன்றாம் தரப்பினரிடமிருந்து மட்டுமே நாங்கள் தகவல்களைச் சேகரிப்போம். மூன்றாம் தரப்பு தரவு வழங்குநர்களிடமிருந்து, உங்கள் அருகிலுள்ள வீடுகளின் ஒப்பீட்டளவில் வளங்களைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் ஒருங்கிணைந்த மக்கள்தொகை மற்றும் வாழ்க்கை முறை தரவு இதில் அடங்கும். இந்த மூன்றாம் தரப்பு தரவு வழங்குநர்கள் சரியான நேரத்தில் உங்களுக்கு சலுகைகளை வழங்க எங்களுக்கு உதவுவதன் மூலம் உங்களுக்கு மிகவும் பொருத்தமான உரிமையாளர் அனுபவத்தை வழங்கவும் உங்களுக்கு மிகவும் பொருத்தமான சேவைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கவும் எங்களுக்கு உதவுகின்றன.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  நீங்களும் எங்களிடமிருந்து எதிர்பார்க்கும் சேவை, தயாரிப்புகள் மற்றும் அனுபவங்களை வழங்குவதும் மேம்படுத்துவதுமே உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிப்பதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான காரணம் ஆகும்.  நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தகவல்


  எங்களுடன் அல்லது எங்கள் சில்லறை வர்த்தகக் கூட்டாளர்களுடன் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தரவை பின்வரும் வழிகளில் நாங்கள் பயன்படுத்துகிறோம்:

  • உங்கள் தயாரிப்புகளின் கொள்முதல், ஒப்படைப்பு மற்றும் விற்பனைக்குப் பிறகு தேவைப்படும் ஏதேனும் பராமரிப்பை வழங்க, நிர்வகிக்க மற்றும் ஒருங்கிணைக்க
  • உங்கள் கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் பதிலளிக்க;
  • உங்களுடன் தொடர்பு கொள்ள;
  • எங்கள் தயாரிப்புகளுக்கு சேவைகளையும் ஆதரவையும் வழங்க;
  • சேவை மற்றும் தயாரிப்பு மேம்பாடுகள் எங்கு செய்யப்படலாம் என்பதை அடையாளம் காணவும், எங்கள் நிபுணர்களில் ஒருவரிடமிருந்து உங்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தவும் எங்களை அனுமதிக்க வாடிக்கையாளர் திருப்தி குறித்த கருத்தாய்வுகள் செய்ய;
  • Dyson -இன் கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்தும் நாங்கள் உங்களுக்குச் சொல்ல வேண்டிய தேவையுள்ள வேறு ஏதேனும் விஷயங்கள் குறித்தும் உங்களுக்கு புதுப்பிப்புகளை வழங்க;
  • நாங்கள் அவ்வாறு செய்வதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வரை, எங்கள் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றி உங்களுக்குச் சொல்ல;
  • உங்கள் Dyson தயாரிப்புகளைப் பற்றிய அத்தியாவசிய சேவை புதுப்பிப்புகளை உங்களுக்கு வழங்க; மற்றும்
  • எதிர்காலத்தில் நீங்கள் எங்களிடம் பொருட்களை வாங்குவதற்கான வழியைத் தனிப்பயனாக்க மற்றும் மேம்படுத்த; எடுத்துக்காட்டாக, எங்கள் வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் மற்றும் சில மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் (சமூக ஊடகத் தளங்கள் உட்பட) உங்களுக்கு பிடிக்கலாம் என்று நாங்கள் நினைக்கும் தயாரிப்புகள் மற்றும் சலுகைகளை உங்களுக்குக் காண்பிப்பது;
  • Dyson தயாரிப்புகளின் சரக்கு மேலாண்மை உட்பட எங்கள் தயாரிப்புகளின் வாழ்க்கைச் சுழற்சியை ஆவணப்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் மற்றும் பதிவு செய்வதற்கும்.


  Dyson தயாரிப்புகளிலிருந்து தகவல்


  Dyson தயாரிப்புகளிலிருந்து நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவை நாங்கள் அப்படியே பயன்படுத்துகிறோம் மற்றும் உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் பிற தனிப்பட்ட தரவுகளுடன் சேர்த்து பின்வரும் வழிகளிலும் பயன்படுத்துகிறோம்:

  • எங்கள் தயாரிப்புகளின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையைக் கண்காணிப்பதன் மூலம் அவற்றின் செயல்திறனையும் அவை குறித்த உங்கள் அனுபவத்தையும் மேம்படுத்த முடியும்; குறிப்பாக, உங்கள் தயாரிப்பில் பிரச்சினை இருக்கும்போது அதை அடையாளம் காண விரும்புகிறோம், அதன்மூலம் அதைப் பற்றி விரைவில் (மற்றும் பிரச்சினை உண்மையில் சாத்தியமாக எழுவதற்கு முன்பே) உங்களுக்குத் தெரியப்படுத்த இயலும்;
  • எங்கள் இணைக்கப்பட்ட தயாரிப்புகளின் செயல்திறனையும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான உங்கள் அனுபவத்தையும் நாங்கள் மேம்படுத்துவதற்காக நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை கண்காணிக்க;
  • எங்கள் இணைக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு புதுப்பிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க (தயாரிப்பில் உள்ள மென்பொருளுக்கான புதுப்பிப்புகள் மற்றும் மேம்படுத்தல்கள் மற்றும் அதனுடன் இணைக்கும் செயலிகள் ஆகியவை இதில் அடங்கும்); மற்றும்;
  • பொதுவாக எங்கள் தயாரிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை மேம்படுத்த;
  • எங்கள் கைபேசி செயலிகள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மூலம் மேம்பட்ட உரிமையாளர் அனுபவங்களை வழங்க.

  எங்கள் இணைக்கப்பட்ட தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்துவதை கண்காணிக்கவும் கூட நாங்கள் விரும்புகிறோம், இதன்மூலம் நாங்கள் இவற்றைச் செய்ய இயலும்:

  • எதிர்காலத்தில் நாங்கள் உங்களுடன் ஈடுபடும் வழியைத் தனிப்பயனாக்கவும் மேம்படுத்தவும் முடியும் (எடுத்துக்காட்டாக, நீங்கள் விரும்பக்கூடும் என்று நாங்கள் கருதும் தயாரிப்புகள் மற்றும் சலுகைகளை ஆன்லைனில் காண்பிப்பதன் மூலம்); மற்றும்
  • (நாங்கள் அவ்வாறு செய்வதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வரை) உங்களுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் சுவாரஸ்யமான சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளை அனுப்ப முடியும்.

  இந்த நோக்கங்களுக்காக எங்கள் இணைக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் செயலிகளை நீங்கள் பயன்படுத்துவதை நாங்கள் கண்காணிப்பதை ஆட்சேபிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆட்சேபிப்பதற்கான உங்கள் உரிமையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, 'உங்கள் கட்டுப்பாடுகள் மற்றும் தேர்வுகள்' என்ற தலைப்பின் கீழே உள்ள பகுதியைப் பார்க்கவும்.  உங்கள் ஆன்லைன் ஊடாடல்களிலிருந்து தகவல்


  எங்கள் வலைத்தளங்கள் அல்லது செயலிகளின் எந்த பகுதியாவது செயல்படவேண்டிய முறையில் செயல்படவில்லை எனில் அதை சரியாக அடையாளம் காண உங்கள் ஆன்லைன் தொடர்புகளிலிருந்து தனிப்பட்ட தரவை அப்படியேவும் மற்றும் உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் பிற தனிப்பட்ட தரவுகளுடன் சேர்த்தும் நாங்கள் பயன்படுத்துகிறோம் - இதனால் நாங்கள் சரியாக செயல்புரியாதவற்றை சரிசெய்ய முடியும் மற்றும் எங்கள் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளை உங்களுக்கும் பிற பயனர்களுக்கும் மேலானதாக ஆக்கமுடியும்;

  எங்கள் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளை நீங்கள் பயன்படுத்துவதையும், ஆன்லைனில் எங்கள் விளம்பர பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்களுடன் நீங்கள் எவ்வாறு ஈடுபடுகிறீர்கள் என்பதையும் நாங்கள் கண்காணிக்க விரும்புகிறோம், இதன்மூலம் எங்களால்:

  • எதிர்காலத்தில் நீங்கள் எங்களிடம் பொருட்கள் வாங்கும் வழியைத் தனிப்பயனாக்கவும் மேம்படுத்தவும் முடியும் (எடுத்துக்காட்டாக, நீங்கள் விரும்பக்கூடும் என்று நாங்கள் கருதும் தயாரிப்புகள் மற்றும் சலுகைகளை ஆன்லைனில் காண்பிப்பதன் மூலம்); மற்றும்
  • (நாங்கள் அவ்வாறு செய்வதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வரை) உங்களுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் சுவாரஸ்யமான சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளை அனுப்ப முடியும்;
  • மோசடியைக் கண்டறிந்து தடுக்க முடியும்;
  • எங்கள் வலைத்தளங்கள், செயலிகள், தயாரிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்;
  • பகுப்பாய்வுகள், பயனர் சுயவிவரங்கள், அறிக்கைகள் மற்றும் இலக்கிடப்பட்ட விளம்பரங்களை உருவாக்க முடியும்;
  • எங்கள் வலைத்தளங்களில் இணையம் செயல்படுத்தப்பட்ட அரட்டைச் சேவைகள் மூலம் ஆன்லைன் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.

  உங்களை கணிசமாக பாதிக்கும் அல்காரிதம்களை அல்லது சுயவிவரக்குறிப்பைப் பயன்படுத்துவது தொடர்புடைய எந்த முடிவுகளையும் Dyson எடுப்பதில்லை.

  எங்கள் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளைப் பயன்படுத்துவதை நாங்கள் கண்காணிப்பதையும் இந்த நோக்கங்களுக்காக ஆன்லைனில் எங்கள் விளம்பர பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்களுடன் நீங்கள் எவ்வாறு ஈடுபடுகிறீர்கள் என்பதையும் ஆட்சேபிப்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. ஆட்சேபிப்பதற்கான உங்கள் உரிமையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, 'உங்கள் கட்டுப்பாடுகள் மற்றும் தேர்வுகள்' என்ற தலைப்பின் கீழே உள்ள பகுதியைப் பார்க்கவும்.  உங்கள் நேரடி ஊடாடல்களிலிருந்து தகவல்கள்


  நீங்கள் ஒரு Dyson கடைக்கு அல்லது மற்றொரு சில்லறை விற்பனை வளாகத்திலுள்ள Dyson ஸ்டாண்டிற்கு செல்லும்போது, உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் சில நேரங்களில் பின்வரும் காரணங்களுக்காக செயலாக்க வேண்டியிருக்கும்:

  • கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு;
  • உங்களிடம் இருக்கும் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு;
  • தயாரிப்புகள் அல்லது மாதிரிகள் அடுத்து சரக்கு இருப்பு இருக்கும்போது உங்களுக்குத் தெரியப்படுத்தற்கு;
  • புதிய தயாரிப்புகளை ஆர்டர் செய்வதற்கு, அதற்கு பணம் செலுத்துதலை செயலாக்கம் செய்வதற்கு மற்றும் அவற்றின் ஒப்படைப்பை ஒருங்கிணைப்பதற்கு.

  எங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்வதற்காக, Dyson கடைகள் அல்லது பிற சில்லறை விற்பனையாளர் வளாகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் Dyson நிகழ்வுகளை நாங்கள் அடிக்கடி நடத்துகிறோம். இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தரவு பின்வருமாறு சேகரிக்கப்படலாம்:

  • சமூக ஊடகங்கள், விளம்பர ஊடகங்கள் அல்லது காப்பகப்படுத்தல் நோக்கங்களுக்காக புகைப்படங்களின் பாகமாக அல்லது படம் பிடித்தலின் ஒரு பகுதியாக சேகரிக்கப்படலாம்;
  • எங்கள் வல்லுநர்கள் மற்றும் ஸ்டைலிஸ்டுகளால், உங்கள் அனுமதியுடன், சமூக ஊடகங்களில் அல்லது விளம்பரப் பொருட்களில் பகிர்வதற்காக சேகரிக்கப்படலாம்;
  • எங்கள் நிபுணர்களில் ஒருவரிடம் நியமன சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக சேகரிக்கப்படலாம்.


  உரிமையாளருக்கான ஆதரவு


  அவ்வப்போது, உங்களுக்கு சொந்தமான Dyson தயாரிப்புகளுக்கு உதவ உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்துகிறோம். மின்னஞ்சல், இடுகை, SMS, தொலைபேசி மற்றும் செயலிக்குள் புஷ் அறிவிப்புகள் உட்பட பல்வேறு வழிகளில் இதைச் செய்கிறோம்.

  எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் பயனராக பின்வரும் உதவிக்கான தகவல்களை உங்களுக்கு அனுப்புவோம்:

  • உங்கள் Dyson தயாரிப்பு அல்லது நீங்கள் பயன்படுத்தும் Dyson சேவையைப் பற்றிய பயனுள்ள தகவல்கள்;
  • உகந்த செயல்திறனுக்காக உங்கள் Dyson தயாரிப்பை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய நினைவூட்டல்கள்;
  • பரிந்துரைக்கப்பட்ட செயலியின் அல்லது மென்பொருளின் புதுப்பிப்புகள் அல்லது உங்கள் தயாரிப்பின் செயல்திறனை மேம்படுத்தும் என்று நாங்கள் கருதும் புதுப்பிப்புகளுக்கான விழிப்பூட்டல்கள்;
  • உங்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால், Dyson நிபுணர்களிடமிருந்து எப்படி, எங்கு உதவி பெறுவது என்பது பற்றிய தகவல்;
  • உங்கள் Dyson வாரண்டியைப் பற்றிய தகவல்;
  • எந்தவொரு முக்கியமான தயாரிப்பின் பாதுகாப்பு அல்லது நினைவுகூறும் அறிவிப்புகள் தொடர்பான விழிப்பூட்டல்கள்; மற்றும்
  • நீங்கள் ஒரு Dyson தயாரிப்பை அல்லது சேவையைப் பயன்படுத்திய பிறகு நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது குறித்த உங்கள் பின்னூட்டக் கருத்துக்கான கோரிக்கைகள்;
  • உங்களுக்கு ஆர்வம் இருக்கக்கூடிய Dyson நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ்களை அனுப்புவதற்கு.

  உங்கள் விருப்பங்களை நீங்கள் மாற்றாதவரை அல்லது எங்களிடமிருந்து ஆதரவு தகவல்தொடர்புகளைப் பெறுவதை நிறுத்த விரும்புகிறீர்கள் என்று எங்களிடம் கூறும் வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவு தகவல்தொடர்புகளை அனுப்புவோம். இதை எப்படி செய்வது என்பது பற்றி கீழே உள்ள பகுதியைப் பார்க்கவும்.

  உங்கள் விவரங்கள் மாறினால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், இதனால் நாங்கள் உங்களுடன் தொடர்பில் தொடர்ந்து இருக்க முடியும்.  உங்கள் தனிப்பட்ட தரவின் பிற சாத்தியமான பயன்பாடுகள்


  உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் இவ்வாறு பயன்படுத்துகிறோம்:

  • உங்கள் Dyson தயாரிப்பு அல்லது வாரண்டி விஷயங்கள் தொடர்பான ஏதேனும் கருத்து வேறுபாடுகள், உரிமைக் கோரல்கள் அல்லது விசாரணைகளில் உதவுவதற்கு;
  • மோசடி பரிவர்த்தனைகளைக் கண்டறியவதற்கு மற்றும் தடுப்பதற்கு;
  • எங்கள் சட்டபூர்வமான கடமைப்பாடுகளுக்கு இணங்குவதற்கு மற்றும்;
  • சுயவிவரக்குறிப்பு மற்றும் புள்ளிவிவரப் பகுப்பாய்விற்கு. இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் பல்வேறு வகையான தனிப்பட்ட தரவுகளை நாங்கள் இணைக்கிறோம். எடுத்துக்காட்டாக, தயாரிப்பின் பிரபலத்தன்மையின் சுயவிவரக்குறிப்பு மற்றும் புள்ளிவிவரப் பகுப்பாய்வு, எங்கள் வலைத்தளம் அல்லது செயலிகளைப் பயன்படுத்தும் போது உங்கள் நடத்தை அல்லது எங்கள் தயாரிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன ஆகியவற்றுக்காக உங்கள் ஆன்லைன் தொடர்புகளிலிருந்து தனிப்பட்ட தரவை, எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் அல்லது Dyson தயாரிப்புகளின் தகவல்களை நாங்கள் இணைக்கிறோம்.
   பிற நோக்கங்கள் பின்வருபவற்றை உள்ளடக்குகின்றன:
   • எங்கள் செயல்முறைகள், நடைமுறைகள் மற்றும் அமைப்புகள் முடிந்தவரை திறம்பட இருப்பதை உறுதிப்படுத்த;
   • நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதற்கு மற்றும் மேம்படுத்துவதற்கு;
   • எங்கள் விளம்பரப் பிரச்சாரங்களின் மற்றும் விளம்பரங்களின் செயல்திறனை தீர்மானிப்பதற்கு; மற்றும்
   • எதிர்காலத்தில் நீங்கள் பொருட்களை வாங்குகின்ற மற்றும் எங்களுடன் ஈடுபடுகின்ற வழியைத் தனிப்பயனாக்குவதற்கு மற்றும் மேம்படுத்துவதற்கு.

  இவ்வாறு தனிப்பட்ட தரவை செயலாக்குவதை ஆட்சேபிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆட்சேபிப்பதற்கான உங்கள் உரிமையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, 'உங்கள் கட்டுப்பாடுகள் மற்றும் தேர்வுகள்' என்ற தலைப்பின் கீழே உள்ள பகுதியைப் பார்க்கவும்.  உங்கள் தனிப்பட்ட தரவை இவ்வாறு கையாள எங்களுக்கு உள்ள நியாயமான காரணம் என்ன?


  தனிப்பட்ட தரவைக் கையாளுவதற்கு "சட்டபூர்வமான அடிப்படை" அல்லது "சட்டபூர்வமான காரணம்" என்பதைக் கொண்டிருக்க வேண்டியது சில நாடுகளில் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களுக்குத் தேவைப்படுகிறது. பரவலாக, உங்கள் தனிப்பட்ட தரவைக் கையாளுவதற்கு எங்களுக்கு சட்டபூர்வமான நியாயமான காரணம் இருக்கவேண்டும் என்பதாகும். பெரும்பாலும், பின்வருபவற்றுக்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் கையாள வேண்டியுள்ளது:

  • நீங்கள் கேட்கும் தயாரிப்புகள் அல்லது சேவைகளை உங்களுக்கு வழங்க; மற்றும்
  • எங்கள் தயாரிப்புகள், வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் ஒழுங்காக செயல்படவும், நீங்கள் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் செய்ய.

  சில நேரங்களில், எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உங்களுக்கு வழங்கவோ அல்லது அவை சரியாக வேலை செய்யவோ உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்துவதற்கான தேவை கட்டாயமில்லை. அந்த சூழ்நிலைகளில், உங்கள் தனிப்பட்ட தரவைக் கையாள்வதில் "நியாயமான ஆர்வம்" என்று அழைக்கப்படுவது எங்களிடம் உள்ளது; எங்கள் "நியாயமான ஆர்வம்" பின்வருமாறு இருக்கலாம்:

  • மோசடியைக் கண்டறிவதற்கு மற்றும் தடுப்பதற்கு;
  • எங்கள் வலைத்தளங்கள், செயலிகள், தயாரிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு;
  • எங்கள் செயல்முறைகள், நடைமுறைகள் மற்றும் அமைப்புகள் முடிந்தவரை திறமையானவையாக இருப்பதை உறுதிப்படுத்த;
  • நாங்கள் சேகரிக்கும் தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்கு மற்றும் மேம்படுத்துவதற்கு;
  • எங்கள் விளம்பர பிரச்சாரங்களின் மற்றும் விளம்பரங்களின் செயல்திறனை தீர்மானிப்பதற்கு; மற்றும்
  • எதிர்காலத்தில் நீங்கள் பொருட்களை வாங்குகின்ற மற்றும் எங்களுடன் ஈடுபடுகின்ற வழியைத் தனிப்பயனாக்குவதற்கு மற்றும் மேம்படுத்துவதற்கு.

  நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சில தனிப்பட்ட தரவுகளை விருப்பத்தேர்வுக்குரியது என்று நாங்கள் குறிப்பிடுகிறோம் (எடுத்துக்காட்டாக, உங்கள் கணக்குத் தகவலை நீங்கள் புதுப்பிக்கும்போது). அந்த தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை நாங்கள் விளக்குவோம், அதை எங்களுக்கு வழங்க நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் தகவல்களை நாங்கள் அவ்வாறு பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். Dyson வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது privacy@dyson.com -இல் எங்கள் உலகளாவிய தனியுரிமைக் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ எந்த நேரத்திலும் அத்தகவல்களை நீக்குமாறு நீங்கள் எங்களிடம் கேட்கலாம்.

  இறுதியாக, ஒப்பீட்டளவில் வரையறுக்கப்பட்ட சில சூழ்நிலைகளில், எங்கள் சட்டபூர்வமான கடமைகளுக்கு இணங்க நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவை ஒரு குறிப்பிட்ட வழியில் கையாள வேண்டியதிருக்கும்; எடுத்துக்காட்டாக, ஒழுங்குமுறை அமைப்புகள் அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உங்கள் தனிப்பட்ட தரவை வெளியிடுமாறு எங்களிடம் கோரப்பட்டால்.

  இறுதியில், நாங்கள் இவ்வாறு உங்கள் தனிப்பட்ட தரவை கையாளுவதற்கான காரணம், இதன் மூலம் நாங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் ஒரு வணிகமாக Dyson -இன் ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்த முடியும். உங்கள் தனிப்பட்ட தரவைக் கையாள்வதற்கான எங்கள் நியாயம் எதுவாக இருந்தாலும் (ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை உங்களுக்கு வழங்குவதற்கு எங்களுக்கு அது அவசியமாவது, அல்லது அது எங்கள் "நியாயமான ஆர்வங்களாக" இருப்பது), உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மதிக்க நாங்கள் நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்கிறோம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • Dyson வளாகங்களுக்கு வருகை புரிபவர்கள்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  எங்கள் இடர்காப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் தேவைகளை நாங்கள் கடைபிடிப்பதை உறுதிசெய்வதற்காக, எங்கள் தளங்களுக்கான அனைத்து பார்வையாளர்களின் தனிப்பட்ட தரவையும் நாங்கள் செயலாக்க வேண்டிய தேவை உள்ளது.

  எந்த அளவுக்கு தனிப்பட்ட தரவு தேவைப்படும் என்பது அந்தந்த நாட்டின் தேவைக்கேற்ப வேறுபடலாம், ஆனால் பொதுவாக நாங்கள் பின்வருவனவற்றை செயலாக்க வேண்டிய தேவை இருக்கும்:

  • பெயர்;
  • தொடர்பு விபரங்கள்;
  • கையொப்பம்;
  • தேவைப்படும் இடங்களில், அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆவணங்கள் (எ.கா. அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள், ஓட்டுநர் உரிமங்கள்); மற்றும்
  • தேவைப்படும் இடங்களில், புகைப்படங்கள்.

  உங்கள் தனிப்பட்ட தரவை பின்வரும் வழிகளில் நாங்கள் பயன்படுத்துகிறோம்:

  • பார்வையாளர் அணுகலையும் வருகையின் அறிவிப்பையும் நிர்வகிக்க;
  • பொருத்தமான பாதுகாப்பு அணுகல் வழங்கப்படுவதை உறுதி செய்ய;
  • உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு நோக்கங்களுக்காக தற்போது தளத்தில் உள்ள மக்களை பதிவு செய்ய;
  • பொருந்தக்கூடிய இடங்களில், தேவையான அல்லது கோரப்பட்ட சேவைகளை வழங்க (எ.கா. ஆன்சைட் தயாரிப்பு ஆதரவு); மற்றும்
  • தேவைப்பட்டால், வெளிப்படுத்தாமல்-இருத்தலுக்கான ஒப்பந்தங்கள் அல்லது பிற தொடர்புடைய சட்ட ஆவணங்களை பூர்த்தி செய்ய.
  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • சப்ளையர்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகம், தூதர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பிற மூன்றாம் தரப்பினரின் தனிப்பட்ட தரவு

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  நாங்கள் செயலாக்கும் தனிப்பட்ட தரவு பின்வருபவற்றை உள்ளடக்கும்:

  • தொடர்பு விபரங்கள்;
  • பணம் செலுத்தும் தகவல் மற்றும் விதிமுறைகள்; மற்றும்
  • மேற்கோள்கள் மற்றும்/அல்லது பின்னணித் தகவல்கள்

  உங்கள் தனிப்பட்ட தரவை பின்வரும் வழிகளில் நாங்கள் பயன்படுத்துகிறோம்:

  • உங்களுடன் பணியாற்றுவதற்கும் உங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கும் Dyson -க்கு வழிவகைசெய்ய;
  • ஏதேனும் Dyson தரவுகளை அல்லது சொத்துகளை நீங்கள் பயன்படுத்துவதை கண்காணிக்க;
  • உங்கள் சேவைகளுக்கான ஒப்புக்கொள்ளப்பட்ட இழப்பீட்டை செயலாக்க மற்றும் நிறைவேற்ற முடிவதற்காக; மற்றும்
  • தேவையான எங்களது உரிய விழிப்புணர்வு செயல்முறையை பூர்த்திசெய்ய.
  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • Dyson தொடர்பு உறுதிமொழி

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  எங்கள் சமீபத்திய தயாரிப்பு பற்றிய அறிவிப்புகள், உரிமையாளருக்கான சலுகைகள், புதிய Dyson தயாரிப்புகளை பரிசோதிக்கும் வாய்ப்புகள் அல்லது வரவிருக்கும் நிகழ்வுகள் போன்றவற்றை உங்களுக்கு தெரியப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். ஜேம்ஸ் டைசன் அறக்கட்டளை மற்றும் ஜேம்ஸ் டைசன் விருது பற்றிய தகவல்களையும் நாங்கள் அவ்வப்போது உங்களுக்கு வழங்குவோம்.

  மின்னஞ்சல், இடுகை, SMS, செயலிக்குள் உள்ள மற்றும் புஷ் அறிவிப்புகள், சமூக ஊடக தளங்கள் மற்றும் தொலைபேசி வழியாக உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நாங்கள் இதைச் செய்கிறோம், ஆனால் நாங்கள் இவ்வாறு செய்வது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே. இறுதியில், எங்களிடமிருந்து நீங்கள் பெறும் தகவல்தொடர்புகளில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

  எனவே நாங்கள் பின்வருபவற்றுக்கு உறுதிமொழி அளிக்கிறோம்:

  • மார்க்கெட்டிங் தகவல்தொடர்புகளை (ஜேம்ஸ் டைசன் அறக்கட்டளை மற்றும் ஜேம்ஸ் டைசன் விருது பற்றிய தகவல்களை உள்ளடக்கியது) மட்டுமே உங்களை அனுப்புவோம், அவ்வாறு அனுப்புவது உங்களுக்கு ஆமோதம் என்று நீங்கள் எங்களுக்கு கூறியிருந்தால்;
  • வேறொரு Dyson குழும நிறுவனம் மட்டுமே மார்க்கெட்டிங் தகவல்தொடர்புகளை உங்களுக்கு அனுப்ப அனுமதிப்போம், அவ்வாறு அனுப்புவது உங்களுக்கு ஆமோதம் என்று நீங்கள் எங்களுக்கு கூறியிருந்தால்;
  • Dyson குழுமத்திற்கு வெளியே உள்ள எவருக்கும் அவர்கள் தங்கள் சொந்த சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த உங்கள் தனிப்பட்ட தரவை ஒருபோதும் அனுப்பமாட்டோம்; மற்றும்
  • ஆதரவு அல்லது சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளைப் பெறுவதை எந்த நேரத்திலும் நிறுத்துவதற்கான விருப்பத்தை உங்களுக்கு அளிக்கிறோம்.
  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • எங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் ஆதரவு குறித்து நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளும் வழியை நீங்கள் எவ்வாறு மாற்றலாம்?

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  நாங்கள் அவ்வாறு செய்வதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்று நீங்கள் எங்களிடம் கூறும்போது மட்டுமே நாங்கள் உங்களுக்கு சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளை அனுப்புவோம்.  உங்கள் விருப்பங்களை மாற்றுதல்


  நாங்கள் உங்களை தொடர்பு கொள்வதை நீங்கள் விரும்புகிறீர்கள் ("தேர்வுசெய்திருந்தால்") என்று நீங்கள் முன்பு கூறியிருந்தாலும், நாங்கள் அவ்வாறு செய்யும் முறையை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ நீங்கள் விரும்பினால், உங்கள் விருப்பங்களை இவ்வாறு புதுப்பிக்கலாம்:

  • Dyson வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வது மற்றும் நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளும் வழியை மாற்ற அல்லது புதுப்பிக்க விரும்புகிறீர்கள் என்று கூறுதல்; அல்லது
  • எங்கள் வலைத்தளத்தில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து உங்கள் விருப்பங்களையும் தகவல்களையும் மாற்றலாம்.
  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • மூன்றாம் தரப்பினருடன் Dyson என்ன தனிப்பட்ட தரவைப் பகிர்ந்து கொள்கிறது?

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  மிகவும் முக்கியமாக, உங்கள் தனிப்பட்ட தரவை ஒருபோதும் விற்க மாட்டோம், அதை இந்த தனியுரிமைக் கொள்கையில் கோடிட்டுக் காட்டியபடி அல்லது நீங்கள் எங்களிடம் கேட்கும்போது மட்டுமே அதை பகிர்வோம்.  Dyson குழுமத்திற்குள் பகிர்ந்துகொள்தல்


  Dyson -இன் பெரும்பாலான செயல்முறைகள், நடைமுறைகள் மற்றும் அமைப்புகள் Dyson குழுமம் முழுவதும் பகிரப்படுகின்றன, அதாவது உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எங்களிடையே பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. உங்கள் தனிப்பட்ட தரவிற்கான அணுகல், அந்த தரவு தேவைப்படும் எங்கள் ஊழியர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்பதையும், உங்கள் தனிப்பட்ட தரவை எவ்வாறு, ஏன் பாதுகாக்கிறோம் என்பதை அனைத்து ஊழியர்களும் புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம். Dyson நிறுவனங்களுக்கிடையில் (EEA -க்கு வெளியே உள்ளவை உட்பட) தனிப்பட்ட தரவின் இடமாற்றங்கள் Dyson -இன் இண்டர்கம்பனி ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.  மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள்


  உங்கள் தனிப்பட்ட தரவை சில குறிப்பிட்ட மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அந்த சேவைகளைச் செய்ய அவர்களுக்குத் தேவையான தனிப்பட்ட தரவை மட்டுமே அவர்கள் அணுக முடியும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஆர்டர் மற்றும் விநியோக விவரங்கள் எங்கள் கூரியர்களுடன் பகிரப்படும். அவர்கள் உங்கள் தனிப்பட்ட தரவை இரகசியமாக வைத்திருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது, மேலும் அதை நாங்கள் அவர்களிடம் கேட்கும்படி தவிர வேறு வகையில் பயன்படுத்தக்கூடாது மற்றும் எப்போதும் இந்த தனியுரிமைக் கொள்கைக்கு இணங்கவேண்டும். அந்த மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் பின்வரும் வகைகளுக்குள் அடங்குவார்கள்:

  • சில நாடுகளில் எங்கள் தயாரிப்புகளை விற்க உதவும் சில விநியோகஸ்தர்கள்;
  • உங்களுக்கு தயாரிப்புகளை வழங்க எங்களுக்கு உதவுபவர்கள்;
  • அஞ்சல் சேவைகள், தயாரிப்பு சேவைகள் மற்றும் பழுதுபார்ப்பு, தயாரிப்பு கொள்முதல்களை செயல்முறைப்படுத்துதல், நிதி சேவைகள், தணிக்கை சேவைகள், நிர்வாக சேவைகள், தகவல் தொழில்நுட்பங்கள் (எ.கா. தரவு சேமிப்பு), பாதுகாப்பு சேவைகள் மற்றும் காப்பீட்டு உரிமைகோரல்கள் ஆகியவற்றில் எங்களுக்கு உதவும் மூன்றாம் தரப்பினர்; மற்றும்
  • உங்களுக்கு சேவைகள் மற்றும் பதில்வினைகளை வழங்க எங்களுக்கு உதவும் மூன்றாம் தரப்பினர்.


  எங்கள் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல்களுடன் எங்களுக்கு உதவும் மூன்றாம் தரப்பினர்


  எங்கள் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் உங்களுக்கும் எங்கள் பிற வாடிக்கையாளர்களுக்கும் பொருத்தமானது மற்றும் சுவாரஸ்யமானது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். அதாவது, எங்கள் ஆன்லைன் விளம்பரம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள அல்லது Dyson தயாரிப்புகளில் அதிக ஆர்வமுள்ளவர்களை சென்றடைய மூன்றாம் தரப்பினருடன் நாங்கள் பணியாற்றுகிறோம். எங்கள் வலைத்தளத்தில் குக்கீகளை அமைப்பதன் மூலம் அவர்கள் இதைச் செய்கிறார்கள் (இது குறித்த கூடுதல் தகவல்களை எங்கள் குக்கீகளின் கொள்கையில் காணலாம்).


  வரையறுக்கப்பட்ட தனிப்பட்ட தரவை (பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்றவை) இவர்களுடனும் கூட நாங்கள் பகிர்வோம்:

  • சமூக ஊடக தளங்கள் (Facebook போன்றவை), அவர்கள் எங்கள் விளம்பரங்களை தங்கள் தளங்களில் வழங்குகிறார்கள் மற்றும்
  • எங்கள் சார்பாக தரவுப் பொருத்தம் பார்த்தல் (டேட்டா மேட்சிங்) மற்றும்/அல்லது தரவுப் பகுப்பாய்வு செய்யும் மூன்றாம் தரப்பு தரவு வழங்குநர்கள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனங்கள்.


  பிற மூன்றாம் தரப்பினர்


  மோசடி பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து தடுக்க எங்களுக்கு உதவும் மூன்றாம் தரப்பினருடன் குறிப்பிட்ட சில தனிப்பட்ட தரவைப் பகிர்ந்து கொள்கிறோம். அந்த மூன்றாம் தரப்பினருடன் நாங்கள் பகிரும் தகவல்களில் நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் சில தகவல்கள் (உங்கள் தொடர்பு விவரங்கள் மற்றும் பரிவர்த்தனை பற்றிய தகவல்கள் போன்றவை) மற்றும் உங்கள் ஆன்லைன் ஊடாடல்களிலிருந்து சில தகவல்கள் (உங்கள் சாதனத்தின் IP முகவரி போன்றவை) அடங்கும். ஒரு பரிவர்த்தனை மோசடியாக இருக்கலாமா என்பதை தீர்மானிக்க அந்த தகவல் பயன்படுத்தப்படுகிறது. மோசடி பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து தடுக்க எங்களுக்கு உதவும் மூன்றாம் தரப்பினரில் ஒன்று Riskified என்ற நிறுவனம்; உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் மற்றும் அவர்களின் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்துவார்கள்.

  நீதிமன்ற உத்தரவு அல்லது நீதிமன்ற ஆணை போன்ற சட்டச் செயல்முறைக்கு பதிலளிப்பது அல்லது பிற தேசிய, மாநில, மாகாண அல்லது உள்ளூர் சட்டங்களுடன் இணங்குவது உட்பட, சட்டப்படி நாங்கள் அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால், உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பகிர்ந்து கொள்வோம்.

  உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பகிர்கிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவலைப் பெற நீங்கள் விரும்பினால், தயவுசெய்து தனியுரிமை குழுவுக்கு privacy@dyson.com -இல் மின்னஞ்சல் அனுப்புங்கள்.  மூன்றாம் தரப்பு தயாரிப்புகளுடன் இணைக்கப்பட்ட தயாரிப்புகளின் ஊடாடல்


  எங்கள் இணைக்கப்பட்ட சில தயாரிப்புகளுக்கு நாங்கள் செயல்திறனை சேர்த்துள்ளோம், இது உங்கள் Dyson தயாரிப்பு உங்கள் வீட்டில் உள்ள சில மூன்றாம் தரப்பு தயாரிப்புகளுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது (Alexa என்று அறியப்படும் Amazon Echo போன்றவை). இந்த செயல்பாடு 'ஸ்மார்ட் ஹோம்' சூழலை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள உங்களை அனுமதிக்கிறது. இருப்பினும், தொடர்புடைய செயல்பாட்டை நீங்கள் இயக்குவதன் மூலம், தயாரிப்புகள் நீங்கள் விரும்பினால் மட்டுமே ஊடாடும்.

  உங்கள் Dyson இணைக்கப்பட்ட தயாரிப்பு மூன்றாம் தரப்பு தயாரிப்புடன் தொடர்புகொள்ள அனுமதிக்க நீங்கள் தேர்வுசெய்தால், சில தகவல்கள் (தனிப்பட்ட தரவு உட்பட) மூன்றாம் தரப்பு தயாரிப்பு மற்றும் தொடர்புடைய மூன்றாம் தரப்பு வழங்குநருடன் பகிர்ந்துகொள்ளப்படவேண்டும். பொதுவாக, இரண்டு தயாரிப்புகளையும் இணைக்க உங்கள் தனிப்பட்ட குறிப்பு எண்ணையும், உங்கள் தயாரிப்பு பற்றிய தகவல்களையும் நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு தயாரிப்புகளும் ஒன்றுடன் ஒன்று ஊடாடல் செய்வதற்கு, எங்களுக்குத் தேவையான தனிப்பட்ட தரவின் குறைந்தபட்ச அளவில் மட்டுமே நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். மூன்றாம் தரப்பு உங்கள் தனிப்பட்ட தரவை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதற்கான விவரங்கள் (அதே போல் அதன் சொந்த தயாரிப்பு மூலம் சேகரிக்கும் எந்தவொரு தனிப்பட்ட தரவும்) மூன்றாம் தரப்பினரின் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்றாம் தரப்பினரின் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அவற்றை உங்கள் Dyson இணைக்கப்பட்ட தயாரிப்புடன் இணைப்பதற்கு முன்பு நீங்கள் கவனமாக மீளாய்வு செய்யவேண்டும். இரண்டுக்கும் இடையிலான இணைப்பை முடக்குவதன் மூலம் உங்கள் Dyson இணைக்கப்பட்ட தயாரிப்பானது மூன்றாம் தரப்பு தயாரிப்புடன் தகவல்களைப் பகிர்வதை நீங்கள் நிறுத்தலாம்.

  உங்கள் Dyson இணைக்கப்பட்ட தயாரிப்புக்கும் மூன்றாம் தரப்பு தயாரிப்புக்கும் இடையே என்ன தகவல் பகிரப்படுகிறது என்பது பற்றி மேலும் அறிய நீங்கள் விரும்பினால், தயவுசெய்து எங்கள் தனியுரிமைக் குழுவை privacy@dyson.com -இல் தொடர்பு கொள்ளவும்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கான இணைப்புகள்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  Dyson -ஆல் இயக்கப்படாத மற்றும் கட்டுப்படுத்தப்படாத பிற வலைத்தளங்களுக்கான இணைப்புகளை நாங்கள் வழங்குகிறோம். அந்த தளங்களின் உள்ளடக்கத்தின் மீது எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை அல்லது அவற்றுக்கு நாங்கள் பொறுப்பல்ல அல்லது அவற்றுக்கு பொறுப்பான மூன்றாம் தரப்பினர் உங்கள் தனிப்பட்ட தரவை எவ்வாறு சேகரித்து பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல. மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை அல்லது அதை நாங்கள் பரிந்துரைப்பதில்லை.

  மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் வழக்கமாக உங்கள் தனிப்பட்ட தரவை எவ்வாறு பயன்படுத்துகின்றன மற்றும் பகிர்ந்து கொள்கின்றன என்பதை விளக்கும் தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. உங்கள் தனிப்பட்ட தரவு எவ்வாறு சேகரிக்கப்படுகிறது மற்றும் பகிரப்படுகிறது என்பதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இந்த வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அந்த தனியுரிமைக் கொள்கைகளை நீங்கள் கவனமாக மீளாய்வு செய்ய வேண்டும்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எத்தனை காலம் வைத்திருப்போம்?

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  உங்கள் தனியுரிமைக் கொள்கையில் கொடுக்கப்பட்ட காரணங்களுக்காகவும், சட்டப்படி அதை வைத்திருக்க வேண்டியிருக்கும் வரையில் அதைப் பயன்படுத்துவதற்கு உங்கள் தனிப்பட்ட தரவு எங்களுக்கு தேவைப்படும் வரை மட்டுமே அதை நாங்கள் வைத்திருப்போம். உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் சேமித்து வைக்கும் உண்மையான காலம் தனிப்பட்ட தரவின் வகை மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, Dyson 360 Eye உங்கள் வீட்டில் ஒரு அறையை வரைபடமாக்கும்போது, அந்த வரைபடம் குறுகிய காலத்திற்கு மட்டுமே சேமிக்கப்படும்; அதேசமயம் நீங்கள் எங்களிடமிருந்து ஒரு பொருளை வாங்கும்போது, உங்களைப் பற்றியும் உங்கள் கொள்முதல் பற்றியும் குறைந்தபட்சம் உங்கள் வாரண்டியின் அல்லது உத்தரவாதத்தின் காலம் வரை நாங்கள் சேமிப்போம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • உங்கள் கட்டுப்பாடுகள் மற்றும் தேர்வுகள்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  முடிந்தவரை, நாங்கள் சேகரிக்கும் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவு துல்லியமானது மற்றும் உங்கள் விருப்பங்களை பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்த அவற்றின் மீது உங்களுக்கு கட்டுப்பாட்டை அளிப்போம். உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவை அணுகவும், புதுப்பிக்கவும், திருத்தவும் உங்களுக்கு உரிமை உண்டு; உங்கள் கணக்கில் உள்ள சில தனிப்பட்ட தரவு தொடர்பாக நீங்கள் அதைச் செய்யலாம். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளும் வழியை நீங்கள் மாற்ற விரும்பினால், 'எங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் ஆதரவு குறித்து நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளும் வழியை எவ்வாறு மாற்றுவது?' என்ற பகுதியை பார்க்கவும்

  சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், நீங்கள் இதைக் கூட செய்யலாம்:

  • உங்கள் தனிப்பட்ட தரவை சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை ஆட்சேபிக்கலாம்;
  • உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தலாம் அல்லது வரையரைப்படுத்தலாம்;
  • உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவை சரிசெய்ய, நீக்க அல்லது அழிக்க எங்களிடம் கேட்கலாம்; அல்லது
  • உங்கள் தனிப்பட்ட தரவை மூன்றாம் தரப்பு சேவை வழங்குநருக்கு வழங்குமாறு எங்களிடம் கேட்கலாம்.

  அந்த உரிமைகள் எப்போதும் பொருந்தாது என்பதையும் அவற்றில் சில விதிவிலக்குகள் உள்ளன என்பதையும் நினைவில் கொள்க. மேலும்., சில குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

  உங்கள் தனிப்பட்ட தரவை அணுகுவதற்காக அல்லது உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பாக உங்களது வேறு எந்த உரிமைகளையும் பயன்படுத்த கட்டணம் விதிக்க உங்கள் நாட்டில் உள்ள சட்டம் எங்களை அனுமதித்தால் நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். உங்களுக்கு பொருந்தக்கூடிய எந்த உரிமைகளையும் பயன்படுத்தியதற்காக உங்கள் மீது பாகுபாடு காட்டப்படமாட்டாது.

  உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பாக உங்கள் உரிமைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், தயவுசெய்து privacy@dyson.com -க்கு மின்னஞ்சல் செய்யவும் அல்லது தொடர்புகள் பக்கத்திலிருந்து உங்கள் உள்ளூர் Dyson மையத்தை அழைக்கவும். உங்கள் கோரிக்கை தொடர்பான கூடுதல் தகவல்களை வழங்குமாறு நாங்கள் உங்களை கோரலாம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம்?

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க நாங்கள் பற்றுறுதியுடன் இருக்கிறோம். உங்கள் தனிப்பட்ட தரவை மற்றும் தனியுரிமையைப் பாதுகாக்க குறியீடாக்குதல் உள்ளிட்ட பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் நிறுவன நடவடிக்கைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் அவற்றை தவறாமல் மீளாய்வு செய்கிறோம். உங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தரவு செயலாக்கப்பட்ட, நிர்வகிக்கப்பட்ட மற்றும் கையாளப்படும் வழியைக் கட்டுப்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் அணுகல் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பௌதிக மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளின் கலவையைப் பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பாதுகாக்கிறோம். உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதில் எங்கள் ஊழியர்கள் போதுமான பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம். எங்கள் நடைமுறைகளின்படி, உங்கள் தனிப்பட்ட தரவை உங்களுடன் பகிர்வதற்கு முன்பு நாங்கள் அவ்வப்போது அடையாளச் சான்றைக் கோரலாம்.

  உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதில் சமரசம் செய்யும் ஒரு பாதுகாப்பு மீறலை நாங்கள் சந்திக்க நேரிடும் ஒரு அரிதான சந்தர்ப்பத்தில், அதைப் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய தேவை இருந்தால், நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • தரவு இடமாற்றங்கள், சேமிப்பு மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவின் உலகளாவிய கையாளுதல்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  பொருந்தும் Dyson குழு நிறுவனம் அல்லது நிறுவனங்கள் நீங்கள் வாழும் நாட்டில் உங்களிடமிருந்து தனிப்பட்ட தரவை சேகரிக்கும். நாங்களும், உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பகிர்ந்து கொள்ளும் மூன்றாம் தரப்பினரும், அந்த தகவலை UK -இல், ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு (EEA) உள்ள நாடுகளில் அல்லது EEA -க்கு வெளியே உள்ள எந்த நாட்டிலும், தொடர்புகள் -இல் பட்டியலிடப்பட்டவை உட்பட, ஹோஸ்ட் செய்யலாம், சேமித்துவைக்கலாம் மற்றும் மற்றபடி கையாளலாம்.

  உங்கள் தனிப்பட்ட தரவை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மாற்றினால், எங்களுக்கு பொருந்தக்கூடிய தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சட்டங்களுடன் இணங்குவதை நாங்கள் உறுதி செய்வோம். ஐரோப்பிய தரவு பாதுகாப்பு சட்டங்கள், குறிப்பாக, EEA -க்கு வெளியே தனிப்பட்ட தரவை மாற்றுவதற்கான குறிப்பிட்ட விதிகளை உள்ளடக்குகின்றன. Dyson நிறுவனங்களுக்கிடையில் (EEA -க்கு வெளியே உள்ளவை உட்பட) தனிப்பட்ட தரவின் இடமாற்றங்கள் Dyson -இன் இண்டர்கம்பனி ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.

  EEA -க்கு வெளியே தனிப்பட்ட தரவை மாற்றும்போது, நாங்கள்:


  எவ்வாறாயினும், உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் இடமாற்றம், செய்வது சேமிப்பது மற்றும் கையாளுவது ஆகியவை இந்த தனியுரிமைக் கொள்கையால் தொடர்ந்து நிர்வகிக்கப்படும். உங்கள் தனிப்பட்ட தரவின் உலகளாவிய கையாளுதல் பற்றிய கூடுதல் தகவலைப் பெற நீங்கள் விரும்பினால், தயவுசெய்து எங்களை privacy@dyson.com -இல் தொடர்பு கொள்ளவும்.

  EEA- க்கு வெளியே தரவு பரிமாற்றங்கள் குறித்த விதிகள் பற்றிய கூடுதல் தகவல்களை, நாங்கள் ஆதாரப்படும் வழிமுறைகள் உட்பட, ஐரோப்பிய ஆணையத்தின் வலைத்தளத்தில் இங்கே காணலாம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • குழந்தைகள்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  Dyson -இன் வலைத்தளங்கள், செயலிகள் மற்றும் தயாரிப்புகள் குழந்தைகளுக்கு உத்தேசிக்கப்பட்டது இல்லை.

  குழந்தைகளின் தரவை நாங்கள் தெரிந்தே சேகரித்து செயலாக்குகிறோம், அந்த செயலாக்கத்தைப் பற்றிய பொருத்தமான தகவல்கள், அவை சேகரிக்கும் இடத்தில் அளிக்கப்படும். இந்தத் தரவுக்கான பெற்றோரின், மற்றும் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் ஒப்புதல் இந்தத் தரவு சேகரிக்கும் நேரத்தில், தேவைப்படும் போது சேகரிக்கப்படும்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • Dyson வேலைவாய்ப்புகள்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  Dyson -இல் வேலைவாய்ப்புக்கான உங்கள் விண்ணப்பத்தை ஆதரிப்பது உட்பட நீங்கள் கோரிய தகவல் அல்லது சேவைகளை உங்களுக்கு வழங்க Dyson வேலைவாய்ப்புகள் வலைத்தளம் உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறது. Dyson வேலைவாய்ப்புகள் வலைத்தளத்தைப் பயன்படுத்தும் போது உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து https://careers.dyson.com/privacy-policy -ஐப் பார்க்கவும்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • இந்த தனியுரிமைக் கொள்கைக்கான மாற்றங்கள்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  இந்த தனியுரிமைக் கொள்கையை வருடத்திற்கு ஒரு முறையாவது மீளாய்வு செய்து புதுப்பிப்போம் மற்றும் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதியை கீழே குறிப்பிடுவோம்.

  எங்கள் தனியுரிமைக் கொள்கையை நாங்கள் மாற்றினால், மாற்றங்களின் விவரங்களை கீழே அறிவிப்போம். உங்களுடைய மின்னஞ்சல் முகவரி எங்களிடம் இருந்தால், அந்த மாற்றங்கள் குறித்த தகவல்களை நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் கூட செய்யலாம். எங்களுக்கு தேவைப்பட்டால், அந்த மாற்றங்களில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் கேட்போம்.

  இந்த தனியுரிமைக் கொள்கை கடைசியாக மீளாய்வு செய்யப்பட்டு நவம்பர் 2019 -இல் புதுப்பிக்கப்பட்டது.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • இந்த தனியுரிமைக் கொள்கைக்கான முந்தைய மாற்றங்கள்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  நவம்பர் 2019

  மேலும் தெளிவுபடுத்துவதற்கும், பார்வையாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் தனிப்பட்ட தரவு தொடர்பான செயலாக்க நடவடிக்கைகளை உள்ளடக்குவதற்கும் எங்கள் உலகளாவிய தனியுரிமைக் கொள்கையை நாங்கள் புதுப்பித்தோம்.


  மார்ச் 2018

  புதிய ஐரோப்பிய தரவு பாதுகாப்பு சட்டங்களின் தேவைகளுக்கு இணங்க எங்கள் உலகளாவிய தனியுரிமைக் கொள்கையை நாங்கள் புதுப்பித்தோம் (குறிப்பாக, பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை).


  நவம்பர் 2017

  மோசடியைக் கண்டறியவும், அதைத் தடுக்கவும் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் எங்கள் மின்னஞ்சல்களுடன் நீங்கள் எவ்வாறு ஈடுபடுகிறீர்கள், Dyson இணைக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் செயலிகளின் தகவல்கள் மற்றும் உங்கள் ஆன்லைன் ஊடாடல்களிலிருந்து தகவல் ஆகிய தகவல்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை மேலும் விரிவாக விளக்க எங்கள் உலகளாவிய தனியுரிமைக் கொள்கையை நாங்கள் புதுப்பித்தோம்.


  ஜூன் 2017

  எங்கள் இணைக்கப்பட்ட சில தயாரிப்புகளுக்கு நாங்கள் செயல்திறனை சேர்த்துள்ளோம், இது உங்கள் Dyson தயாரிப்பு உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய சில மூன்றாம் தரப்பு தயாரிப்புகளுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது (Alexa என்று அறியப்படும் Amazon Echo போன்றவை).


  மே 2017

  அணுகல் செயல்முறை மற்றும் மூன்றாம் தரப்பினருடன் தரவுகளை பகிர்வதற்கான உரிமையை தெளிவுபடுத்தும் உலகளாவிய தனியுரிமைக் கொள்கைக்கான சிறிய திருத்தங்கள்.


  ஆகஸ்ட் 2016

  Dyson கூட்டாளர்களை மற்றும் சமூக தளங்கள் வழியாக சந்தைப்படுத்துதலை தெளிவுபடுத்தி உலகளாவிய தனியுரிமை போர்ட்டல் வெளியீட்டில் சிறிய திருத்தங்கள்.


  மார்ச் 2016

  உலகளாவிய தனியுரிமை போர்ட்டல் தொடங்கப்பட்டது.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • இந்த தனியுரிமைக் கொள்கையின் மொழிபெயர்ப்புகள்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  இந்த தனியுரிமைக் கொள்கை ஆங்கிலத்திலிருந்து பல்வேறு நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எங்கள் வலைத்தளங்கள், செயலிகள் மற்றும் இணைக்கப்பட்ட தயாரிப்புகளின் அனைத்து பயனர்களுக்கும் கொள்கை தெளிவாக உள்ளதையும் அணுகக்கூடியவாறு இருப்பதையும் உறுதிப்படுத்த நாங்கள் இதைச் செய்துள்ளோம்.

  இந்த தனியுரிமைக் கொள்கையின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளுக்கு இடையில் ஏதேனும் மோதல்கள் அல்லது முரண்பாடுகள் இருந்தால், ஆங்கிலப் பதிப்பு ஆதிக்கம் செலுத்தும். .

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்
 • எங்களை தொடர்பு கொள்ளவும்

  மேலும் படியுங்கள்
  குறைவாகப் படியுங்கள்

  இந்த தகவலை நீங்கள் வேறு வடிவத்தில் பெற விரும்பினால் அல்லது உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது குறித்து ஏதேனும் கேள்விகள், கருத்துகள் அல்லது கவலைகள் உங்களுக்கு இருந்தால், தயவுசெய்து எங்கள் உலகளாவிய தனியுரிமைக் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.

  தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவது தொடர்பான புகார்களைக் கையாளும் பொறுப்புள்ள உங்கள் நாட்டின் பொருத்தமான கட்டுப்பாட்டாளர் அல்லது ஆணையத்தையும் கூட நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

  எப்போது வேண்டுமானாலும் எங்கள் உலகளாவிய தனியுரிமைக் குழுவை privacy@dyson.com -இல் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம் அல்லது பின்வரும் முகவரிக்குக் கடிதம் எழுதலாம்:
  C/O The Privacy Team,
  Dyson,
  Tetbury Hill,
  Malmesbury,
  Wiltshire,
  SN16 0RP

  நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.

  மேலும் படியுங்கள் குறைவாகப் படியுங்கள்