உரிமையாளர் தனியுரிமை அறிவிப்பு
Dyson-இல் நாங்கள், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது என்பதையும், அவை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்கிறோம். சிறந்த தொழில்நுட்பங்களையும் அனுபவங்களையும் உருவாக்க, Dyson இணையதளங்கள், My Dyson செயலி மற்றும் எங்களது இணைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலமாகவும் தகவல்களை சேகரிக்கிறோம். அந்தத் தகவல்களை நாங்கள் கவனமாகப் பாதுகாப்பதுடன் அவற்றை எச்சரிக்கையுடன் கையாள்கிறோம். அதன் பயன்பாட்டைப் பொறுத்தவரை நாங்கள் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவதுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்களைப் பற்றி நாங்கள் உங்களுக்கு எப்பொழுதுமே தெரியப்படுத்துவோம்.